காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு 4ஆவது மருத்துவராக, காயல்பட்டினத்தைச் சேர்ந்த டாக்டர் ஃபாஸீ நூஹ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக தமிழக அரசுக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சமீப காலம் வரை நான்கு மருத்துவர்களுக்கான இடம் (SANCTIONED POSTS) ஒதுக்கப்பட்டிருந்தது (தற்போது அது ஆறு மருத்துவர்கள் என உயர்த்தப்பட்டுள்ளது).
இருப்பினும், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் - பல ஆண்டுகளாக - 2 - 3 மருத்துவர்கள் இடங்கள் காலியாகவே இருந்து வந்தது. இது சம்பந்தமாக, கடந்த சில மாதங்களாக, தொடர்ந்து நடப்பது என்ன? குழுமம் - சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு மனுக்கள் அளித்து வந்தது. அதன் பயனாக, தற்போது 3 மருத்துவர்கள் (டாக்டர் ராணி டப்ஸ், டாக்டர் ஆல்ஃபர் செல்வின் மற்றும் டாக்டர் ஹில்மி) - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே!
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் நான்காவது காலியிடம், பல மாதங்களாக - காலியிடமாக காண்பிக்கப்படாமல் இருந்ததை அடுத்து, இது குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனுக்கள் வழங்கப்பட்டு, சில வாரங்களுக்கு முன்பு அந்த இடம் - காலியிடமாக அறிவிக்கப்பட்டது.
காயல்பட்டினம் அம்பல மரைக்கார் தெருவை சார்ந்த மருத்துவர் டாக்டர் ஃபாஸி நூஹ் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் நான்காவது மருத்துவராக நேற்று (ஏப்ரல் 26) நியமனம் செய்யப்பட்டார். எல்லாப்புகழும் இறைவனுக்கே!
டாக்டர் ஃபாஸி நூஹ் அவர்களின் மருத்துவ சேவை - பொது மக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்திட பிரார்த்தனை செய்வதுடன், அவருக்கு வாழ்த்துக்களையும் நடப்பது என்ன? குழுமம் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் - டாக்டர் ஃபாஸி நூஹ் அவர்களை - காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு நியமனம் செய்த, Directorate Of Public Health(DPH) இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி மற்றும் Directorate Of Medical & Rural Health Services (DMS) இயக்குனர் டாக்டர் இன்பசேகரன் ஆகியோருக்கு, மனமார்ந்த நன்றியினையும் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 27, 2018; 9:00 am]
[#NEPR/2018042701]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|