காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW அமிலக் கழிவு தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக் கோரி, சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா – SDPI கட்சியின் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது. காவல்துறை தடை காரணமாக அது ஆர்ப்பாட்டமாக முடிவுற்றது. இதுகுறித்த அக்கட்சியின் செய்தி ஊடகத் துறை வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
DCW ஆலைக்கு எதிராக காயல்பட்டணத்தில் மாபெரும் மக்கள் விழிப்புணர்வு பேரணி 28/04/2018 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இப்பேரணிக்கு SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சம்சுதீன் அவர்கள் தலைமை வகித்தார். SDPI கட்சியின் தொகுதி நிர்வாகிகள் முஹம்மது உமர், நிஜார், பாப்புலர் ஃபரண்ட மாவட்ட நிர்வாகி உஸ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். SDPI கட்சியின் காயல் நகர தலைவர் அப்துர்ரஹ்மான், நகர செயலாளர் அஷ்ரப் அப்துல்லா ஆகியோர் இந்த பேரணியை வழிநடத்தினார். இந்த பேரணியில் காயல்பட்டணத்தை சார்ந்த பல்வேறு தோழமை கட்சிகள், சமுதாய அமைப்புகள், பொதுநல அமைப்புகள் மற்றும் ஜமாஅத் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.
DCW ஆலைக்கு எதிரான பல்வேறு களப்போராட்டங்களை SDPI கட்சியினர் பொதுமக்களுடன் இணைந்து பல கட்ட போராட்டங்களாக எடுத்து வருகிறது. இந்த போராட்டங்களின் மூலமாக நாசகார DCW ஆலையை இழுத்து மூடும் வரையும் மேலும் மாபெரும் மக்கள் தன்னெழுச்சி போராட்டமாக மாற்றும் வகையில் மக்களுடன் இணைந்து SDPI கட்சியினர் தொடர்ந்து போராடுவோம் என்பதை தெரிவிக்கப்பட்டது. DCW ஆலைக்கு எதிராக கண்டன கோஷங்கள், பாதிப்புகள் குறித்த பதாகைகளை சிறுவர்களும் இளைஞர்களும் தங்கள் கையில்லேந்தி இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
இந்த பேரணி SDPI கட்சியின் ஒருங்கிணைப்பில் காயல்பட்டணம் மகாத்மா காந்தி நியாபக நுழைவு வாயிலில் இருந்து துவங்கியதும் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி பேரணியை தடுத்து நிறுத்தினர். அதனை தொடர்ந்து SDPI கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அரசு துறை பல்வேறு நெருக்கடி தந்து இந்த பேரணியை நடத்தவிடாமல் மத்திய மாநில அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசத்தை காட்டியது. எனினும் SDPI கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் வீரியமான முடிவுகளால் இறுதியாக இந்த விழிப்புணர்வு பேரணி கண்டன ஆர்ப்பாட்டமாக மாற்றம் பெற்றது.
DCW ஆலைக்கு எதிராக இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது கண்டனத்தை கோஷங்களாக பதிவு செய்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொதுச்செயலாளர் சம்சுதீன், தொகுதி தலைவர் முகம்மது உமர், நகர தலைவர் அப்துர்ரஹ்மான், சமூக ஆர்வலர்கள் மக்தூம் நெய்னா மற்றும் அஹமது ரியாத் ஆகியோர் கண்ட உரையாற்றினார்கள். காயல் நகர செயலாளர் அஷ்ரப் அப்துல்லா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினரின் நெருக்கடிகளை தாண்டி சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |