காயல்பட்டினம் அரசு பொது நூலகத்திற்கு, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும ஏற்பாட்டில் நாற்காலிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது அரசு நூலகம்.
பழைய கட்டிடத்தில், சிறு இடத்தில், பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த நூலகம், சில ஆண்டுகளுக்கு முன்பு - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் அவர்களின் ஒருங்கிணைப்பில், தமிழக அரசின் தன்னிறைவு திட்டம் (SELF SUFFICIENCY SCHEME) மூலம், அரசின் 50 சதவீதம் நிதி உதவி, தனவந்தர்களின் 50 சதவீத நிதி உதவி என்ற அடிப்படையில், சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், விரிவாக்கம் செய்யப்பட்டது.
விரிவாக்கத்தை தொடர்ந்து, சமுதாயத்திற்கு - குறிப்பாக மாணவர்களுக்கு - பிரயோஜனமான பல்வேறு நிகழ்ச்சிகள் - தொடர்ந்து இந்நூலகத்தில் நடைபெற்று வருகின்றன. நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் பயன்பாட்டுக்கு - வாடகை அடிப்படையில் நாற்காலிகள் பெறப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாடகைக்கு நாற்காலிகள் எடுப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) அமைப்பின் சமூக ஊடகப்பிரிவான நடப்பது என்ன? குழுமத்தின் ஏற்பாட்டில் - 20 நாற்காலிகள், அரசு விருது பெற்று, திறம்பட செயல்புரிந்து வரும், நூலகத்தின் பொறுப்பாளர் நூலகர் முஜீப் அவர்களிடம் இன்று - அரசு நூலகத்தின் பயன்பாட்டிற்காக - ஒப்படைக்கப்பட்டன. இந்த நிகழ்வில், நடப்பது என்ன? குழும நிர்வாகிகளும், நூலக வாசகர்களும் கலந்துக்கொண்டனர்.
அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக செயலாற்றி வரும் MEGA அமைப்பு - இது போன்ற சமூகப்பணிகளை, அதன் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வழங்கும் நன்கொடை மூலம் செயல்படுத்துகிறது. எல்லாப்புகழும் இறைவனுக்கே!
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 30, 2018; 6:30 pm]
[#NEPR/2018043002]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|