போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கற்களை காயல்பட்டினம் நகராட்சி அகற்றிவிட்டதாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் அளித்த புகாருக்கு, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ப்ரேம் ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
பெரிய நெசவுத் தெருவில் இருந்து வீரசடைச்சி அம்மன் கோவில் தெரு மற்றும் கூலக்கடை பஜார் செல்லும் பாதையில் - போக்குவரத்திற்கு இடையூறாக, பொடி கருங்கல் ஜல்லிகள் உள்ளதாக, இன்று காலை நடப்பது என்ன? குழுமத்தின் இரண்டாவது குழுமத்திலும், வார்டு 11 குழுமத்திலும், சகோதரர் ஒருவர் - புகைப்படங்களுடன் தகவல் பதிவு செய்திருந்தார்.
இந்த புகார் - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பிரேம் ஆனந்த் அவர்களுக்கு, உடனடியாக நடப்பது என்ன? குழும நிர்வாகிகளால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கற்கள் தற்போது அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக, நகராட்சி ஆணையர் திரு பிரேம் ஆனந்த் தற்போது தகவல் வழங்கியுள்ளார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 4, 2018; 1:45 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|