பொறியியல் படிப்பிற்கான இணையவழி மாணவர் சேர்க்கை மே 03 அன்று துவங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கவும், ஆவணங்களை சரிபார்க்கவும் – தூத்துக்குடி மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தகவலறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்த பொறியியல் கல்லூரிகள், சுய நிதி மூலம் இயங்கும் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு ஆகியவற்றுக்கான இணையவழி மாணவர் சேர்க்கை - நேற்று (மே 3) துவங்கியது. மே 30 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
இன்று மாலை 6 மணி நிலவரப்படி, 16,259 மாணவர்கள் - தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார்கள்.
இதில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவும், பிறகு ஆவணங்களை சரிப்பார்க்கவும் அரசு அறிவித்துள்ள மையங்கள் (TNEA Facilitation Centre;TFC) வாயிலாக விண்ணப்பித்துள்ளவர்கள் 2174 மாணவர்கள்; தாங்களாகவே இணையவழியில் விண்ணப்பம் செய்த மாணவர்கள் - 14085.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு, பிரையண்ட் நகரில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி (University VOC College of Engineering, 7th Street West, Bryant Nagar Main Road, Thoothukudi, Tamil Nadu 628008) மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பிற ஊர்களுக்கான மையங்கள் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 4, 2018; 9:00 pm]
[#NEPR/2018050403]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|