செளதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 111 வது செயற்குழு ஜித்தா ஷரஃபிய்யாவிலுள்ள இம்பால உணவக உள்ளரங்கில் வைத்து நடந்தேறிய நிகழ்வின் விபரம் வருமாறு:
செளதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தில் 111-வது செயற்குழு கூட்டம் சென்ற 27/04/2018, வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின் ஜித்தா-ஷரஃபியாவிலுள்ள இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் வைத்து சிறப்பாக நடந்தேறியது.
இந்த செயற்குழு கூட்டத்திற்கு இம்மன்றதின் தலைவர் சகோ.குளம்.எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன் தலைமை ஏற்க, சகோ.அரபி எம்.ஐ. முஹம்மது ஷுஐபு இறைமறை ஓத, சகோ.எஸ்.ஹச். அப்துல்காதர் வருகை புரிந்த அனைவரையும் வரவேற்க கூட்டம் இனிதே ஆரம்பமானது.
தலைமையுரை:
111-வது செயற்குழுவிற்கு தலைமை பொறுப்பை ஏற்று நடத்திய சகோ.குளம்.எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன் தனது தலைமையுரையில், முதற்கண் சென்ற செயற்குழுவில் வேலையின் நிமிர்த்தமாக கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி தொடர்கையில், நமது செயற்குழு தொடர்ந்து சிறப்பான முறையில் நடப்பதற்கு, உறுப்பினர்கள் தங்கள் வருகையை குறித்த நேரத்தில் வந்து கலந்து சிறப்பித்து, கூடுமானவரையில் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தை தவற விடாமல் வந்து, தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் நம் ஊர் நலனுக்கு நல்ல சேவைகள் செய்திட ஊன்று கோலாக இருந்திட வேண்டும் என்று மன்றத்தின் தலைவர் என்ற முறையில் அன்பான வேண்டுகோள் வைக்கின்றேன். மேலும் சென்ற வருடம் கத்தார் காயல் நலமன்றதுடன் இணைந்து பள்ளிச் சீருடைகள் வழங்கினோம், அதுபோல் இந்த வருடமும் நாம் வழங்க இந்த கூட்டத்தில் முயற்சி செய்வோம், என்று கேட்டுக்கொண்டு நேரமின்மையை கருத்திற்கொண்டு தனதுரையை நிறைவு செய்தார்.
நிதி நிலை:
மன்றத்தின் தற்போதைய இருப்புதொகை, பயனாளிகளுக்கான உதவிகள் மற்றும் கல்விக்கென ஒதுக்கிய தொகை போன்ற நிதி நிலைகளை மிக விளக்கமுடன் பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம் மன்ற உறுப்பினர்களுக்கு அறியத் தந்தார்.
மன்ற செயல்பாடுகள்:
நம்மூர் நலனில் அக்கறை கொண்டு சேவை செய்யும் மனப்பான்மையுடன் இங்கு வந்து கலந்துகொண்ட உறுப்பினர்களை அன்போடு வரவேற்று, தலைவர் சுற்றிக்காட்டிபடி குறித்த நேரத்தில் நாம் கூட்டத்தை சிறப்புடன் நடத்த, நமது வருகை மற்றும் நேரம் மிக முக்கியம் என்பதை எடுத்துக்கூறி, இன்ஷா அல்லாஹ் இனி வரும் அடுத்த கூட்டம் நோன்பு இப்தார் நிகழ்வுடன் நடைபெறும் என்பதையும் நினைவு படுத்தி, சென்ற வருடம் புனித நோன்பு மாதம் நாம் உலக காயல் மன்றங்களுடன் இணைந்து நம் ஊர் பள்ளி இமாம்கள் மற்றும் முஅத்தின் இவர்களுக்கு நிதிகளை வழங்கி கெளரவித்தோம், அது போன்று வரும் நோன்பு கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்து கூடுதலாக கொடுக்க இறைவன் நமக்கு அருள்புரிவானாக, மேலும் சந்தா வரவு மிக தோய்வாக இருப்பதால் நாம் நமது உறுப்பினர்களை சந்தித்து அதனை பெறுவதற்கு முயற்சி மேற்கொள்வோம். என்று வேண்டுகோளை முன் வைத்து, நம் மன்றம் ஆற்றிய சேவைகள் சிலவற்றை எடுத்துக்கூறி தனதுரையை நிறைவு செய்தார் மன்ற செயலாளர் சகோ.எம்.ஏ.செய்யது இப்ராஹீம்.
அடுத்து உரை நிகழ்த்திய மற்றுமொரு செயலாளர் சகோ. சட்னி எஸ்.ஏ.கே. செய்யது மீரான் முஜம்மில் வரும் புனித ரமலான் மாதம், ஜூன் 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வுடன் மன்றத்தின் பொதுக்குழு நடைபெறும் என்ற நல்ல செய்தியுடன், கடந்த செயற்குழு கூட்டத்தின் நிகழ்வுகளையும், நிறைவேற்றிய தீர்மானங்கள், அதன் பிறகு மன்றத்தின் மூலம் நடந்தேறிய பணிகளின் நிகழ்வினை அறிக்கையாக சமர்ப்பித்து அமர்ந்து கொண்டார்.
மருத்துவ உதவிகள்:
உலக காயல் நலமன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பான ஷிபா அறக்கட்டளை மூலமாக வந்திருந்த மனுக்கள் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டு, உபதலைவர் மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாத் அவர்களால் பரிசீலிக்கப்பட்டு, தைராய்டு அறுவைச் சிகிச்சை, தொண்டையில் கட்டி, புற்றுநோய், வயிற்றில் கட்டி, வலிப்பு நோய், கால்வலி மற்றும் விபத்து என பாதிப்புக்குள்ளான 09 காயல் சொந்தங்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க உறுப்பினர்கள் அனுமதியுடன் உறுதி செய்யப்பட்டது, மேலும் அவர்கள் பூரணமாக நலம் பெற்றிட வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
கலந்துரையாடல்:
மன்ற உறுப்பினர்களின் ஆரோக்கியமான கலந்துரையாடலில் நல்ல பல கருத்துக்கள் பகிரப்பட்டன. மன்றத்தின் உறுப்பினர்களை சந்தித்து, சந்தாக்களை அதிகரிப்பது, ஜகாத் நிதிகளை பெருக்குவது, இருசக்கர வாகனத்தால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி இளைய சமுதாயம் உயிர் காக்க முயற்சி மேற்கொள்வது, மற்றும் நமதூர் மக்களுக்கு நல்ல பல நலப்பணிகளை செய்திட உறுப்பினர்கள் முன் வர வேண்டியது. போன்ற அழகிய கருத்துக்களை உறுப்பினர்கள் பதிவாக்கினர்.
தீர்மானங்கள்:
1 - கத்தர் காயல் நலமன்றத்தின் வழிகாட்டலின் படி பள்ளி மாணவ மாணவிகளுக்கான இலவச சீருடை வழங்கும் சம்பந்தமாக தலைவர் வேண்டிக்கொண்டதின் பேரில் சென்ற வருடம் வழங்கியது போல் இந்த வருடமும் செயற்குழு உறுப்பினர்களின் தாராள நிதி உதவியுடன், பள்ளிச் சீருடைகள் 30 மாணாக்கர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
2 - இஃக்ரா கல்வி சங்கத்திற்கு வருடாவருடம் வழங்குவதுபோல் இந்த வருடமும் 09 மாணவ கண்மணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வழங்குவதென உறுதி செய்யப்பட்டது.
3 - உலக காயல் நலமன்றங்களின் கூட்டமைப்பான இஃக்ரா கல்விச் சங்கம் மற்றும் மருத்துவ கூட்டமைப்பான ஷிஃபா அறக்கட்டளை இவைகளின் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டது.
4 - இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் புண்ணியம் மிக்க ரமலான் நோன்பின் இஃப்த்தார் நோன்பு திறக்கும் நிகழ்வுடன் 40 ஆவது பொதுக்குழு ஜூன் 01 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 06:00 மணியளவில், ஷரபிய்யா - இம்பாலா பேரடைஸ் உணவக உள்ளரங்கில் வைத்து நடைபெறும். அவ்வமயம் மன்ற உறுப்பினர்கள் குறித்த நேரத்தில் வந்து கலந்து சிறப்பித்து தரும்படி வேண்டுகோள் வைக்கப்பட்டது.
சகோ.செய்து முஹம்மது ஷாதுலி பங்கேற்ற அனைவருக்கும் மற்றும் அனுசரணை வழங்கியவருக்கும் மனதார நன்றி நவில, சகோ.பிரபு எஸ்.ஜே. நூர்தீன் நெய்னா பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
சகோ.ஓ.ஏ.சி.கிஜார் கூட்டத்திற்கான முழு அனுசரணையை சிறப்புடன் செய்து இருந்தார்.
தகவல் மற்றும் படங்கள்:
எஸ்.ஐச்.அப்துல் காதர்.
எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
27.04.2018.
|