பொறியியல் படிப்பில் சேர்க்கை பெற இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு ஆயத்தமாவதற்கும், பதிவு செய்வதற்குமான வழிமுறைகளை விளக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவலறிக்கை:-
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA 2018) முழுமையாக இணையவழி விண்ணப்ப பதிவாகவும் மற்றும் இணைய வழி கலந்தாய்வு சேர்கையாகவும் அமையும்.
விண்ணப்பத்திற்கான தகவல்களைப்பதிவு செய்தல், பதிவு செய்வதற்கான பணத்தை செலுத்துதல், விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவைப்பதிவு செய்தல், தற்காலிக இடஒதுக்கீட்டை ஏற்றல் அல்லது நிராகரித்தல், முடிவு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டு ஆணையை பெறுதல் ஆகிய எல்லாமே இணையவழியாகவே நடத்தப்படும்.
சான்றிதழ்கள் சரிபார்த்தல் மட்டுமே ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள "பொறியியல் சேர்க்கை உதவி மையம்" (TFC) வழியாக நடத்தப்படும்.
விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு தவிர மற்றெல்லா செயல்களையும் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமாயினும் செய்யலாம்.
இந்த வசதி இல்லாதவர்கள், எல்லா சேவைகளுக்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையத்தை அணுகலாம். அங்கு அவர்களுக்கு தேவையான எல்லா சேவைகளும் கிடைக்கும்.
தாங்களாகவே மாணவர்கள் விண்ணப்பம் செய்ய இணையதள முகவரி:
https://tnea.ac.in
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள TFC மையம் முகவரி:
University VOC College of Engineering,
7th Street West,
Bryant Nagar Main Road,
Thoothukudi,
Tamil Nadu 628008
இணையவழியில் விண்ணப்பம் செய்யும் முன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவு செய்ய என்னென்ன விபரங்கள் வேண்டும் என்பதை தெரியப்படுத்தும் படிவத்தை (DATA SHEET) நிரப்பினால், விரைவாக இணையவழியில் பதிவு செய்யலாம்.
மேலும் TFC மையத்தை தாங்கள் அணுகும்போது, இந்த படிவம் (DATA SHEET) கண்டிப்பாக நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.
மறவாதீர்கள், மே 3, 2018 அன்று இணையவழி விண்ணப்பம் நிரப்புதல் துவங்கியது.
இதுவரை - 20,508 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளார்கள்.
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: மே 30, 2018
இணைப்பு:
(1) விண்ணப்பத்தை பதிவு செய்ய என்னென்ன விபரங்கள் வேண்டும் என்பதை தெரியப்படுத்தும் படிவம் (DATA SHEET)
(2) இணையவழியில் எவ்வாறு விண்ணப்பத்தை நிரப்புவது என படிப்படியாக விளக்கம் தரும் PDF ஆவணம் (தமிழ்)
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 6, 2018; 12:00 pm]
[#NEPR/2018050601]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|