தொழில்துறை (Vocational) பிரிவு மாணவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பொறியியல் சேர்க்கையில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த அரசின் தகவலை உள்ளடக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்த பொறியியல் கல்லூரிகள், சுய நிதி மூலம் இயங்கும் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு ஆகியவற்றுக்கான இணையவழி மாணவர் சேர்க்கை - மே 3 அன்று துவங்கியது. மே 30 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
நேற்று (மே 11) மாலை வரை, 45,608 மாணவர்கள், இணையவழியில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார்கள்.
ஜாதி வாரியாக இட ஒதுக்கீடுகள் போக, விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு விபரங்களை கடந்த பதிவில் கண்டோம்.
மேலும் - தொழிற்துறை பாடங்களை (VOCATIONAL STREAM) தங்கள் பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களில் பயின்ற மாணவர்களுக்கு - அரசு பொறியியல் கல்லூரிகளில் 100 இடங்களும், இதர கல்லூரிகளில் 4 சதவீத இடங்களும் ஒதுக்கபப்டுகிறது. இந்த சலுகையை அனுபவிக்க - இந்த மாணவர்களின் பாடங்களில் ஒரு பாடமாவது - PHYSICS / CHEMISTRY / MATHEMATICS - பாடங்களாக இருக்கவேண்டும்.
மேலும் - இந்த வழிமுறையில் பொறியியல் பயில அங்கீகரிக்கப்பட்ட தொழிற்துறை பாடங்கள் வருமாறு: General Machinist, Electrical Machines and Appliances, Electronic Equipments, Draughtsman Civil, Auto Mechanic, Textile Technology
இவைகள் தவிர - இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களின் (ex-Servicemen) குழந்தைகளுக்கு என 150 இடங்கள், ஆண்டொன்றுக்கு ஒதுக்கப்படுகிறது. இதில் 8 இடங்கள் - அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துறைகளிலும், 34 இடங்கள் - அரசு பொறியியல் கல்லூரிகளிலும், 108 இடங்கள் - தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் ஒதுக்கப்படுகிறது.
மேலும் - மாற்று திறனாளிகளுக்கு, மொத்தம் 5 சதவீதம் இடம் ஒதுக்கப்படுகிறது. இந்த 5 சதவீதம் இடம், 5 வகையான குறைபாடுகளாக பிரிக்கப்பட்டு (கண் பார்வை, காது கேளாதோர், நடையில் பிரச்சனை, மன ரீதியாக பிரச்சனை, மேலே விபரிக்கப்பட்டவைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடுகள் கொண்டவர்கள்) - ஒவ்வொரு பிரிவுக்கும், தனித்தனியாக 1 சதவீதம் இடம் ஒதுக்கப்படுகிறது.
இந்த சிறப்பு சலுகையை பெற அரசு நிர்ணயித்துள்ள அளவுகோல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மே 12, 2018; 10:00 am]
[#NEPR/2018051201]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|