இலங்கை காயல் நல மன்றம் – காவாலங்கா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஓ.எல்.எம்.ஆரிஃப் உடைய மாமனார், காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சேர்ந்த எம்.ஏ.முஹம்மத் யாஸீன் என்ற யாஸீன் மாமா, நேற்று 21.10 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 79. அன்னார்,
மர்ஹூம் ஹாஃபிழ் அ.க.முஹம்மத் அலீ ஸாஹிப் அவர்களது மகனும்,
ஹாஃபிழ் பீ.கிதுரு முஹம்மத் அவர்களது மருமகனாரும்,
நாவலர் எல்.எஸ்.இப்றாஹீம் அவர்களது சகலையும்,
எம்.ஒய்.முஹம்மத் அலீ ஸாஹிப், ஹாஃபிழ் எம்.ஒய்.செய்யித் இஸ்மாஈல் ஆகியோரின் தந்தையும்,
மர்ஹூம் கே.பிள்ளை லெப்பை & சகோதரர்களது மச்சானும்,
காவாலங்கா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஓ.எல்.எம்.ஆரிஃப், எம்.என்.அப்துர் ராஸிக் ஆகியோரின் மாமனாரும்,
ஹாஃபிழ் எம்.ஏ.உமர் அலீ இஷ்தியாக், எம்.ஏ.முஹம்மத் யாஸீன் இம்தியாஸ், எம்.ஏ.இஹ்திஸாம் ஆகியோரது தாயாரின் தந்தையும்,
எம்.ஏ.முஹம்மத் யாஸீன், எம்.ஏ.ஆதில், எஸ்.ஐ.அஹ்மத் யாஸீன், எஸ்.ஐ.யூனுஸ் ஆகியோரது தந்தையரின் தந்தையும்,
எம்.ஒய்.ஸிராஜ் என்பவரது பூட்டியப்பாவுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று 13.00 மணிக்கு, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
|