காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியில் – பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு திருக்குர்ஆனைத் திருத்தத்துடன் ஓதப் பயிற்றுவிக்கும் மக்தப் பிரிவு பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இம்மாணவர்களுக்கு, நிகழாண்டு மஹ்ழா மீலாத் விழாவை முன்னிட்டு, கடந்த 2018 நவம்பர் 17 முதல் 19 வரை (சனி, ஞாயிறு, திங்கள்) மூன்று நாட்கள் சன்மார்க்கப் போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போட்டிகளில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்ச்சி, 09.12.2018. ஞாயிற்றுக்கிழமையன்று மக்தப் வளாகத்தில், மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை துணைத் தலைவர் வாவு எஸ்.காதிர் ஸாஹிப் தலைமையில் நடைபெற்றது. மக்தப் மாணவர் கிராஅத் ஓத, ‘தாருத்திப்யான் நெட்வர்க்’ நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
மஹ்ழரா செயலாளர் எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, நிர்வாகிகளுள் ஒருவரான பீ.எஸ்.ஏ.மரைக்கார் ஸாஹிப், துணைச் செயலாளர் ‘ஜெஸ்மின்’ கலீலுர் ரஹ்மான், கணக்குத் தணிக்கையாளர் எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை, மீலாதுர் ரஸூல் கமிட்டி தலைவர் ஸ்டார் எம்.எஸ்.அப்துல் காதிர், அதன் செயலாளர் பீ.எம்.ஏ.சி.ஷெய்க் நூருத்தீன், துணைச் செயலாளர் என்.எஸ்.அஜ்வாத், மஹ்ழரா கணக்கர் கிதுரு முஹம்மத் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்து, மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
இந்நிகழ்ச்சியில் மக்தப் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, மக்தப் ஆசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர். |