இந்தியாவின் 70ஆவது குடியரசு நாள் நாடெங்கிலும் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், சதுக்கைத் தெருவிலுள்ள கட்சியின் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில் தேசிய கொடியேற்றப்பட்டது.
நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் முன்னிலை வகிக்க, நகரப் பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை தேசிய கொடியேற்றினார்.
மாவட்டத் துணைச் செயலாளர் பெத்தப்பா சுல்தான், கொள்கை பரப்பு மாவட்டச் செயலாளர் என்.டீ.இஸ்மாஈல், மூத்த தலைவர் எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், வார்டு நிர்வாகிகளான கே.எம்.என்.உமர் அப்துல் காதிர், பத்ருத்தீன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
N.T.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ
|