செளதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 117 - வது செயற்குழு ஜித்தா ஷரஃபிய்யாவிலுள்ள இம்பால உணவக உள்ளரங்கில் வைத்து நடந்தேறிய நிகழ்வின் விபரம் வருமாறு:
செளதி அரேபியா- ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 117-வது செயற்குழு கூட்டம் கடந்த 11/01/2019, வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் 07:00 மணியளவில் ஜித்தா-ஷரஃபியாவிலுள்ள இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் வைத்து சிறப்பாக நடந்தேறியது.
சகோ. குளம் எம்.ஏ. அஹ்மது முஹியதீன் தலைமை ஏற்று நடத்த, சகோ.அரபி.எம் ஐ. முஹம்மது ஷுஐபு இறைமறை ஓதி துவங்க, சகோ.பிரபு. எஸ்.ஜெ.நூர்தீன் நெய்னா வருகை புரிந்த அனைவரையும் வரவேற்க கூட்டம் இனிதே ஆரம்பமானது.
தலைமையுரை:
மன்றம் நகர் மக்களின் துயர் துடைக்க தொய்வின்றி செய்துவரும் நற்பணிகளின் போற்றுதலை நினைவுகூர்ந்து, இனி புதிய தலைமையில் பொறுப்பேற்று செய்யும் உறுப்பினர்களும் அதனை ஆக்கபூர்வமாக செயலாற்றுவார்கள் என்று நம்புவதாகவும் கூறி அடுத்த மாதம் நடைபெறும் காயலர் குடும்ப சங்கமம் பொதுக்குழுவில் புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்றும் கூறி அமர்ந்துகொண்டார். குளம் எம்.ஏ. அஹ்மது முஹியதீன்.
மன்ற செயல்பாடுகள்:
கடந்த கூட்டத்தின் தீர்மானம் மேலும் நிறைவேறிய மன்றப்பணிகள், இனி நாம் புதிய உத்வேகத்துடன் செயல்பட இருக்கும் சேவைகளையும் மன்றம் இதுவரை நல்ல முறையில் செயல்பட்ட விதத்தையும் எடுத்துக்கூறி சமீபத்தில் ஊரில் உலக காயல் நலமன்றங்களின் கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் “சந்தியுங்கள் காயலின் முதல் மாணவர்களை - 2018” நிகழ்விற்கு, இம்மன்றம் அனுசரணை வழங்கியது எடுத்துக்கூறி, அதற்காக நம் உறுப்பினர்கள் சிலர் மனமுவந்து வழங்கிய நல்ல உள்ளங்களுக்கு நன்றியும் கூறி தனது உரையை நிறைவு செய்தார். மன்ற செயலாளர் சகோ. எம். ஏ. செய்யது இப்ராஹீம்.
நிதி நிலை:
தற்போதைய இருப்பு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் போன்ற விபரம் மற்றும் நிதிநிலைகளை விளக்கினார் பொருளாளர் சகோ, எம்.எம்.எஸ்.ஷேக் அப்துல் காதர்.
மருத்துவ உதவிகள்:
ஷிபா மருத்துவ கூட்டமைப்பின் மூலமாக பெறப்பட்ட பயனாளிகளின் மனுக்கள் வரிசைப்படுத்தப்பட்டு மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், மன்றத்தலைவர் வாசித்து விளக்க, தீக்காயம், கழுத்தில் கட்டி, சிறுநீரக பிரச்சனை, எலும்பு முறிவு, சர்க்கரை நோயினால் காலில் புண், மூளையில் கட்டி, மூளை நரம்பு பாதிப்பு, 12 வயது சிறுவனுக்கு நீர் துவாரத்தில் பிரச்சனை, மற்றும் கண் அறுவை சிகிச்சை இருவர், என மொத்தம் 10 பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு அவர்களின் பூரண நல பேற்றுக்காக வல்லோன் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
கலந்துரையாடல்:
உறுப்பினர்களின் நல்ல பல கருத்துக்களும் ஆலோசனைகளும் பரிமாறப்பட்டு, நல்ல சேவைகளை நமது ஊரின் நன்மைக்காக நாம் தொடர்ந்து செய்வோம் என்று ஆரோக்கியமான கலந்துரையாடலில் பரிமாறப்பட்டன.
சகோ. எஸ்.ஹெச். அப்துல் காதர் நன்றி நவில, சகோ. எஸ்.எஸ். ஜாஃபர் ஸாதிக் பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் இச்செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
தீர்மானம்:
1 - சகோ. எஸ்.எஸ். ஜாஃபர் ஸாதிக் தலைமையில் அமைக்கப்பெற்ற ஏழு பேர் கொண்ட குழு கலந்து ஆலோசித்து, புதிய தலைமையில் புதிய நிர்வாக உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து, இந்த கூட்டத்தில் சமர்ப்பிக்க, வரும் காயலர்கள் குடும்ப சங்கமம் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு பழைய நிர்வாக குழு கலைக்கப்பட்டு, புதிய நிர்வாகம் செயல்பட துவங்கும் என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. நடுநிலையோடு புதிய நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த தந்த ஏழு பேர் கொண்ட குழுவினர்களுக்கு, இந்த மன்றம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது.
2 - 09.01.2019 அன்று ஊரில் உலக காயல் நலமன்றங்களின் கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் “சந்தியுங்கள் காயலின் முதல் மாணவர்களை - 2018” விழாவில், கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்ற மாணவ - மாணவிகளை இம்மன்றம் வெகுவாக பாராட்டி வாழ்த்துகின்றது.
3 - இன்ஷா அல்லாஹ் வரும் 08.02.2019 அன்று, ஜித்தா ஹஜ் விமான நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள இஸ்திராஹா எனும் மிக விசாலமான ஓய்வு இல்லத்தில் வைத்து காயலர்கள் குடும்ப சங்கமம் எனும் 40-ஆவது பொதுக்குழு நடைபெறும்.
தகவல் மற்றும் படங்கள்:
எஸ்.ஐச்.அப்துல் காதர்.
எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
11.01.2019.
|