நகர்நலத் திட்டப் பணிகளுள் பெரிய அளவிலான பணிகளை, துபை காயல் நல மன்றத்துடன் இணைந்து செய்திட - ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்ற செயற்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
அபூதபீ காயல் நல மன்றத்தின் 64 ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 25-01-2019 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் குளம் அபூபக்கர் அவர்கள் தலைமையில் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கிவைத்தார்.
^ மன்றத்தின் இம்மாத ஷிஃபா மருத்துவ உதவியாக 8 மனுதாரர்களுக்கு Rs 60,000 ஒதுக்கப்பட்டது.
^ உறுப்பினர்களின் சந்தாக்களை தொய்வின்றி பெற்றிட பல கருத்துக்களும் ஆலோசனைகளும் இக்கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது. எல்லா உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு நடப்பு சந்தா தொகைகளை அதிக படுத்தி தந்திட முயற்சிகள் செய்யும்மாறு தலைவர் எம்.எம்.மக்பூல் அஹ்மத் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
^ பிற காயல் நல மன்றங்களுடன் இணைந்து குறிப்பாக தாய்லாந்து மன்றத்தோடு இணைந்து ஆண்டுதோறும் நமதூர் இறையில்லங்களில் பணிபுரியும் இமாம் - முஅத்தின்களுக்கு பெருநாள் ஊக்கத்தொகை மற்றும் கத்தார் நலமன்றத்துடன் கைகோர்த்து ஏழை எளிய மாணவ மாணவிகளுக்குக்கான சீருடை வழங்கிட பொருளுதவி செய்து வருவது போல் சில குறிப்பிட்ட பெரிய அளவிலான மக்களுக்கான தொலைநோக்கு நலத்திட்டங்களில் துபாய் காயல் மன்றத்தோடு ஒன்றிணைந்து செயல்பட்டால் நமது குறிக்கோள்கள் மக்களை சென்றடையும் என்பதை முந்தைய கூட்டங்களில் முடிவு செய்தபடி கீழ்காணும் ஆறு பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது இவர்கள் துபாய் காயல் நல மன்ற நிர்வாகிகளோடு நிறை குறைகளை ஆலோசித்து முடிவுகள் எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
1)தலைவர் M.M.மக்பூல் அஹ்மத்
2)S.M.B. ஹுஸைன் மக்கீ ஆலிம் மஹ்ழரீ
3)P.M.ஹுஸைன் நூருத்தீன்
4)A.R.ரிஃபாய்
5)அப்துல் காதர்(பாதுல் அஷ்ஹாப்)
6)டாக்டர் H.M. ஹமீத் யாசிர்
ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
^ அண்மையில் காலமான மன்றத்தின் துணைத்தலைவர் S.A.C. ஹமீத் அவர்களது அன்புத்தாயார் மர்ஹூமா எம்.கே.டீ. செய்யித் அஹ்மத் ஃபாத்திமா அவர்களின் மஃக்ஃபிரத்திற்காக (பாவப் பிழை பொறுப்பிற்காக) துஆ பிரார்த்தனை செய்யப்பட்டு இறுதியாக ஆலிம் S.M.B.ஹுஸைன் மக்கீ மஹ்ழரி அவர்கள் துஆ ஓத,கஃப்பாராவுடன் செயற்குழு கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக...
தகவல்:
A.R.ரிஃபாய்
(மக்கள் தொடர்பு & செய்தி / ஊடகத்துறை பொறுப்பாளர்)
படங்கள்:
நோனா அபூ ஹுரைரா |