கேரளா மாநிலம் மலபார் காயல் நல மன்றத்தின் (மக்வா) சார்பில் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டம் கூறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:
மலபார் காயல் நல மன்றத்தின் (மக்வா) 23 வது பொது குழு 27.01.2019 ஞாயிற்றுகிழமை மாலை 5 மணிக்கு கோழிக்கோட்டில் M.K.நெய்னா முஹம்மது அவர்களின் வீட்டு மாடியில் வைத்து சிறப்பாக நடை பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்....
அதன் நிகழ் முறைகளும் தீர்மானங்களும்
கிராஅத்
ஆரம்பமாக நமது உறுப்பினர் MS.அஹமது மரைக்கார் அவர்களின் மகனார் AM. சதக் அன்வர் அவர்கள் அழகிய குரலில் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளை துவக்கி தந்தார்.
வரவேற்புரை
செயற்குழு உறுப்பினர் பாபுலர் டூல்ஸ் மொஹ்தூம் அவர்களின் மகனார் MMS.முஹம்மது ஃபஹிம் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சிகளை செயற்குழு உறுப்பினர் NM. முஹம்மது இஸ்மாயில் தொகுத்து வழங்கினார்.
தலைமை உறை
நம் மன்றத்தின் தலைவர் MG.செய்யீது இபுறாஹிம் அவர்கள் தலைமை ஏற்று நடத்தி தந்தார். அவர் தனது உரையில்... சுமார் 120 உறுப்பினர்களை கொண்ட நமது மக்வா அமைப்பின் இந்த பொதுக்குழுவிற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை பாதியை கூட தாண்டவில்லை இது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார். இது இந்த பருவத்தின் கடைசி பொதுக்குழு என்றும் குறிப்பிட்டார். இதை ஒரு அமலாக நினைத்து வாருங்க என்றும் கேட்டுக்கொண்டார்.
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மன்றத்தேர்தலில் அதிக ஆர்வத்துடன் பங்கெடுத்து, நம் மன்றத்தை மேலும் நல்ல முறையில் கொண்டு செல்ல வேண்டும் என் கேட்டு கொண்டார்.
துணை செயலாளர் உரை
அதை தொடர்ந்து மன்ற துணை செயலாளர் ASI. முஹம்மது ஸிராஜ் அவர்கள் கடந்த கூட்டத்தின் மினிட்ஸ் வாசித்து கூட்டத்தின் அங்கிகாரம் பெற்றுக் கொண்டார்.கடந்த பொதுகுழுவிற்கு இந்த பொதுகுழுவிற்கும் இடைபட்ட நிகழ்வுகளை விளக்கி கூறினார்.குறிப்பாக கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏற்ப்பட்ட பெரும் பாதிப்பிற்கு நம்முடைய பங்களிப்புகள் எவ்வாறு அமைந்தது,நமதூர் ஐக்கிய பேரவையுடன் இணைந்து கேரளமக்களுக்கு செய்த பணிகளையும் எடுத்துக்கூறினார்.அடுத்த மாதம் நடைபெற உள்ள மன்ற தேர்தல் பற்றியும்,அதில் ஒவ்வொரு உறுப்பினர்களும் பங்கு பெறுவது பற்றியும் குறிப்பிட்டார்.
மன்ற செயலாளர் NM.அப்துல் காதர் உரை நிகழ்த்தினார்.அவர் நமது மக்வாவின் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற அனைவர்களின் பங்களிப்புகளும் அவசியம். வர இருக்கும் தேர்தலில் இளைஞர்கள் அதிகம் பங்கு பெறவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கணக்குத்தாக்கல்
பொருளாளர் S.சேக் சலாவுதீன் அவர்கள் கடந்த பொதுகுழு முதல் இந்த பொதுகுழு வரை உள்ள கணக்குகளை தாக்கல் செய்து பொதுக்குழுவின் ஒப்புதலை பெற்றுக்கொண்டார்.
மேலும் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளபாதிப்பு நிவாரண நிதிகளுக்காக பெறப்பட்ட அனைத்து கணக்குகளையும் முறைப்படி தாக்கல் செய்து பொதுக்குழுவின் முழு ஒப்புதலை பெற்றுக்கொண்டார்.
அறங்காவலர் உரை
அடுத்ததாக அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நம் மன்றத்தின் செயற்குழு உறுப்பினரும், ஷிஃபாவின் நமது அறங்காவலருமாகிய M.A.K.முஹம்மது உஸ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அவர் தமது உரையில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஷிஃபாவின் செயல்பாடுகள் மிக சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
அருள்மறையின் அழகிய இருவசனங்களை ஓதி அதன் பொருளையும் எடுத்துக்கூறி ..... நல் அமல்கள் என்றால் என்ன...? என்ற வினாவுடன் தொடங்கி... இந்த பணிகளையும் இபாதத்தாக நினைத்து செயல்படவும்,மனதை இஃக்லாசுடன் வைத்து மன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைவரும் தயாராக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். வந்திருந்த அனைத்து உறுப்பினர்களிடமும் கருத்து கேட்டார். அனைவர்களும் தன்னால் முடிந்த அளவு மக்வா செயல்பாடுகளுடன் கைகேர்ப்பதாக வாக்களித்தனர்.
முக்கிய அம்சமாக தனது உரையில் கேரள மக்களின் துயரத்தில் நாம் என்ன செய்தோம்...? களத்தில் இறங்கி செயல்பட்டதையும், காயல் பட்டினம் ஐக்கிய பேரவையுடன் இணைந்து செயலாற்றியதையும், கோழிக்கோடு மாவட்ட ஆட்சியருடன் இனைந்து பணியாற்றியதையும் , வயநாடு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாம் செய்த பணிகள், கோழிக்கோடு இரயில்வே நிலையத்தில் மற்றும் கருண ஸ்கூலில்195 குடும்பங்களுக்கு அத்தியாவசிய தேவைக்கான வீட்டு உபகரணங்கள் வினியோகம் செய்யப்பட்டது பற்றியும்,புதிய பாலம் பகுதியில் 47 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்கி கொடுத்தது, மற்றும் வடநாட்டில் 50 குடும்பங்களுக்கு கட்டில்,பெட், பெட்ஷீட், கொடுத்தது,கேரளா போலீஸ் அஸோசியேஷன் முலம் 400கிலோ அரிசி வினியோகம் செய்தது பற்றியும் மிகவும் விரிவான முறையில் எடுத்துரைத்தார்.
இறுதியாக மழை வெள்ளத்தால் முற்றிலும் அழிந்து போன தாஹிர் என்பவர் வீடு புதிய வீடு உண்டாக்கும் வேலைக்கு 1,80,000 ருபாய் கொடுக்க வாக்களித்துள்ள விஷயத்தையும், பனைமரம் ஆயிஷா என்பவரின் வீட்டு ரீப்பேர் பணிகள் செய்து கொடுத்ததையும் நினைவு கூர்ந்தார்.
மறுமையில் பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்ற உறுதியுடன் மக்வாவின் பணிகளை செய்ய வாருங்கள்.ஈகோ என்ற எண்ணத்தை தூக்கி எறிந்து விட்டு வாருங்கள். என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
ஷிஃபாவின் முன்னாள் A.O. வின் உரை
நமது ஷிஃபா அமைப்பின் முன்னால் நிர்வாக அதிகாரி கண்டி ஸிராஜ் அவர்கள் உரை நிகழ்த்தினர் ....மக்வாவின் பணிகள் மிகவும் சிறப்பானவைகள் என்றும், நானும் மக்வாவின் ஆரம்ப கால உறுப்பினர் என்றும் பதிவு செய்தார்.நான் ஷிஃபா வில் உள்ள சமயத்தில் கடிதங்களுக்கு நேரடியாக விசாரணைக்கு போகும் சமயம் நோயாளிகள் செய்யும் தூஆக்கள் என்னை மனதை நெகிழ வைத்துவிடும். அவர்கள் அந்த சமயத்தில் செய்யும் தூஆக்கள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானவை, நான் சம்பளம் வாங்கி வேலை செய்தால் கூட எனக்கும் நல்ல பல தூஆக்கள் கிடைத்தது..
நீங்கள் கண்டிப்பாக தூஆக்களை அதிகம், அதிகம் பெறுவீர்கள்.உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.உங்களுடய ஒத்துழைப்புகள் மக்வாவிற்கு மிகவும் அவசியமாகும் என்று குறிப்பிட்டார்.
உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றம்
இன்ஷாஅல்லாஹ்..... தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் 24 ம் தேதி நடைபெறும் என்றும், தேர்தல் நிர்வாக அதிகாரிகளாக ஹூஸைன் பாய்(அல் அமீன் ஜுவல்box), இஸ்மாயில் பாய் (பிஸ்மில்லாஹ் என்டர் பிரைஸ்) மற்றும் ஜாக்கிர் பாய் ஆகியோர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
ஆதரவாளர்களுக்கும் இந்த வருடம் முதல் ஓட்டுரிமை வழங்க பொதுக்குழு ஆதரவை தெரிவித்தது. M.A.K.உஸ்மான் அவர்கள் தேர்தல் பற்றிய விளக்கங்களை கொடுத்தார்.
நன்றியுரை
இறுதியாக துணைத்தலைவர் MA.உதுமான் அப்துல் ராஜிக் அவர்கள் நன்றி கூற அனைவரின் தூஆ பிராத்தனையுடன் கூட்டம் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
கலந்து கொண்ட அனைவருக்கும் சுவை மிகு தேனீருடன் வடையும் , பறிமாறப்பட்டது. அனைவரும் ஆர்வத்துடன் பங்குபெற்று வாழ்த்தி , தூஆ செய்து சென்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|