காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.03.2019. வியாழக்கிழமையன்று 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது. காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ திக்ர் மஜ்லிஸுக்கு தலைமை தாங்க, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நிகழாண்டு வைபவக் கமிட்டி உறுப்பினரான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ திக்ர் மஜ்லிஸை வழிநடத்தினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
முதல் நாள் சொற்பொழிவு 09.03.2019. சனிக்கிழமையன்று துவங்குகிறது. அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின், கிராஅத் ஓதப்பட்டு, ‘லுத்பில் இலாஹி’ பைத் அனைவரும் பாட, அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்தின் முதல் நாள் பாடத்தை மஜ்லிஸின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ ஜுமானீ ஓதி துவக்கி வைக்கிறார். காலை 09.15 மணிக்கு அதற்கான விளக்கவுரை வழங்கப்படுகிறது.
முதல் நாளன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கு, ‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியரும், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் மேலாளருமான மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.ஷெய்கு முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ விளக்கவுரையாற்றுகிறார்.
2019 ஏப்ரல் மாதம் 07ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று அபூர்வ துஆ பிரார்த்தனையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுறுகின்றன. மறுநாள் 08.04.2019. திங்கட்கிழமையன்று அதிகாலையில் நேர்ச்சை வினியோகம் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீ்ஃப் நிர்வாகிகள் மற்றும் வைபவக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
|