காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விரிவான விபரம்:-
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் - ஹிஜ்ரீ 1440ஆம் ஆண்டு வைபவங்களுக்கும், ஓராண்டு நிர்வாகத்திற்குமாக புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுக் கூட்டம், 20.01.2019. ஞாயிற்றுக்கிழமையன்று 20.30 மணிக்கு மஜ்லிஸ் ஹல்காவில், அதன் தலைவர் டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.வஜ்ஹுத்தீன் மின்ஹாஜீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மஜ்லிஸில் பல்லாண்டு காலம் சேவையாற்றிய – அதன் தலைவர் மர்ஹூம் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், அலுவலகப் பொறுப்பாளர் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் நூஹ், ஒலி ஒளி அமைப்பாளர் ‘ஹேப்பி’ காஜா முஹ்யித்தீன் ஆகியோரின் மறைவுக்கு துவக்கமாக இரங்கல் தெரிவித்து தீர்மானமியற்றப்பட்டதுடன், அன்னவர்களின் மண்ணறை – மறுமை நல்வாழ்விற்காக துஆ இறைஞ்சப்பட்டது.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை, கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் வாசித்தார்.
கடந்தாண்டின் வரவு - செலவு கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
நடப்பு 92ஆம் ஆண்டு மஜ்லிஸ் வைபவ
துவக்க நாள் 09.03.2019. சனிக்கிழமை என்றும்,
துஆ நாள் (நிறைவு நாள்) 07.04.2019. ஞாயிற்றுக்கிழமை என்றும்,
நேர்ச்சை நாள் 08.04.2019. திங்கட்கிழமை என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மஜ்லிஸ் புதிய நிர்வாகிகள் பின்வருமாறு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
தலைவர்:
‘முத்துச்சுடர்’ என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ ஜுமானீ மஹ்ழரீ
துணைத் தலைவர்:
டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத்
மேலாளர் (மேனேஜர்):
என்.எஸ்.நூஹ் ஹமீத்
இணைச் செயலாளர்கள்:
(1) எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் ஸாலிஹ்
(2) கே.எம்.செய்யித் அஹ்மத்
(3) மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ
துணைச் செயலாளர்:
என்.டீ.பாஜுல் அஸ்ஹப் ஜுமானீ
வைபவ கமிட்டியினர்:
(1) மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ
(2) மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ
(3) குளம் முஹம்மத் தம்பி
இவ்வாறாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ துஆ இறைஞ்ச, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த - மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். |