காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.03.2019. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
மார்ச் 15 அன்று ஏழாம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் பேராசிரியரும், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியருமான மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ வழங்கினார்.
இறைமார்க்கப் பரப்புரைக்கு ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக – நபிகளாரும், நபித்தோழர்களும் வசிப்பிடம் துறந்து சென்ற ஹிஜ்ரத் பயணம் குறித்து அவரது உரையில் தகவல்கள் இடம்பெற்றன.
ரஜப் 08ஆம் நாள் (மார்ச் 16) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரி & அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி ஆகியவற்றின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, மவ்லவீ ஹாஃபிழ் ஜெ.ஏ.தாவூத் மாஹின் ஆகியோர் வழங்குகின்றனர்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
|