காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரியில் இன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பின் நடைபெற்ற - ரமழான் தலைப்பிறை தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டத்தின் நிறைவில்,
ரமழான் தலைப்பிறை காணப்பட்ட தகவல் எங்கிருந்தும் கிடைக்கப் பெறாத காரணத்தால், இன்று (05.05.2019. ஞாயிறு பின்னேரம்) ஷஃபான் 30ஆம் நாள் இரவு என்றும், நாளை (06.05.2019. திங்கள் பின்னேரம்) ரமழான் முதல் நாள் இரவு என்றும், 07.05.2019. செவ்வாய்க்கிழமையன்று ரமழான் முதல் நோன்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு, மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் தலைமை தாங்கினார்.
காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரி, மஹ்ழரா அரபிக் கல்லூரி ஆகியவற்றின் உலமாக்களும், நகர உலமாக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஜாவியா வளாகத்தின் வெளியே நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் காத்திருந்து, அறிவிப்பைப் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
|