காயல்பட்டினம் ஜாவியா நிர்வாகத்தால், ஆண்டுதோறும் ரமழான் மாதம் முழுக்க 11.00 மணி முதல் 12.00 மணி வரை மார்க்க தொடர் சொற்பொழிவு ஜாவியா வளாகத்தில் நடத்தப்படுவது வழமை.
நிகழாண்டில் (ஹிஜ்ரீ 1440),
மே 07 செவ்வாய்க்கிழமையன்று, காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரி & அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, மகுதூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் முஹ்யித்தீன் ஃபாஸீ ஆகியோர் உரையாற்றினர்.
மே 08 புதன்கிழமையன்று, ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வரும் – தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்டத் தலைவரும் - அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ உரையாற்றினார்.
மே 09 வியாழக்கிழமையன்று, ஐக்கிய சமாதானப் பேரவையின் நிறுவனர் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ உரையாற்றினார்.
தகவல்:
ஹாஃபிழ் M.A.செய்யித் முஹம்மத்
|