ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரின் ஆக்கத்தில், இஸ்லாமிய பின்னணியைக் கொண்ட ஆங்கில நாவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூலை மாதத்தில், எழுத்தாற்றலை வளர்க்கும் பயிற்சி முகாமை காயல்பட்டினத்தில் நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரைச் சேர்ந்தவர் உம்மு அஃப்ராஸ் முஹம்மத். இவர் ஐக்கிய அரபு அமீரகம் – துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் விளக்கு ஷெய்க் தாவூத் – எஸ்.முத்து ஆமினா தம்பதியின் மகளும், அபூதபீ காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் டாக்டர் விளக்கு செய்யித் அஹ்மத் உடைய மனைவியுமாவார்.
உளவியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ள இவர், இஸ்லாமிய கல்வியில் உயர் பட்டயப் படிப்பை முடித்துள்ளதோடு, அதே துறையில் மேற்படிப்பையும் படித்து வருகிறார்.
வாசிப்பில் அதிக ஆர்வம் கொண்ட இவர், புகழ்பெற்ற முஸ்லிம் எழுத்தாளர்களின் நாவல்களை மிகவும் விரும்பிப் படிப்பது வழக்கம். அப்படி அவர் படித்த பல நூற்களில் பெரும்பாலானவை இஸ்லாமிய வாழ்வியலுக்கு முரணாகவும், மேற்கத்திய நாகரிகத்தை வரவேற்றும் அமைந்திருப்பதைக் கண்டு மனம் புழுங்கிய அவர், முற்றிலும் இஸ்லாமிய வாழ்வியலைத் தாங்கிய அழகிய நாவலை வாசிப்புலகிற்குத் தர வேண்டும் என - 2013ஆம் ஆண்டில், ஆன்லைன் பல்கலைக் கழகத்தில் தனது பி.ஏ. (Islamic Studies) படித்துக் கொண்டிருக்கையில் முடிவெடுத்தார்.
2016ஆம் ஆண்டு முதல் எழுத்துலகில் நுழைந்த அவர், தனது இடைவிடாத படிப்பு, 3 குழந்தைகளைக் கவனித்தல், வீட்டு நிர்வாகம் இவையனைத்தையும் தாண்டி – இஸ்லாமிய வாழ்வியலை வெளியுலகிற்கு எடுத்துரைக்கும் வகையிலான சிறுகதைகளை நிறையவே எழுதத் துவங்கினார். 2019 ஏப்ரல் 19ஆம் நாளன்று, “Here With You” எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு நாவலை அவர் எழுதி வெளியிட்டுள்ளார். ஒரு முஸ்லிமின் அன்றாட வாழ்வியல் முறையை விளக்கும் இந்த நாவலின் கதையோடும், கதாபாத்திரங்களோடும் – அதை வாசிப்போர் ஒன்றி விடும் வகையில் அதன் எழுத்துக்கள் அமைந்துள்ளன.
ஃபாத்திமா என்பவரது மகன் ஃபைஸல். அவரது மனைவி ஸல்மா. இம்மூவரையும் முதன்மைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு, மாமியார் – மருமகள், கணவன் – மனைவிக்கிடையே வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை இஸ்லாமிய வாழ்வியல் அடிப்படையில் சித்தரிக்கும் வகையில் இந்த நாவலில் ஒரு கதையும் இடம்பெற்றுள்ளது. இதுபோல பல கதைகள் அதில் உள்ளடக்கம்.
The book can be purchased as a Kindle e-book [https://www.amazon.com/dp/B07QCLBZ64] or as a Paperback [https://pothi.com/pothi/book/umm-afraz-muhammed-here-you-3]. The book will be available in Amazon.in and Flipkart soon insha Allah.
2018ஆம் ஆண்டில் - நாவல் தரத்திலல்லாத பல தலைப்புகளிலும் இவர் மின்னூல்களையும் இவர் வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சில: The 5 R's of Tadabbur al-Qur'an: A Family Halaqah Guide [https://payhip.com/b/K0cA], and a free e-book entitled Maintaining Ties of Kinship E-Booklet + Workbook [https://payhip.com/b/FN8b].
எழுத்தார்வம் தவிர, உம்மு அஃப்ராஸ் முஹம்மதுக்கு க்ராஃபிக் வடிவமைப்பு மிகவும் பிடித்த துறையாகும். தனக்காகவும், தனது வாடிக்கையாளர்களுக்காகவும் நிறைய க்ராஃபிக் வடிவமைப்புகளைச் செய்து கொடுத்துள்ள அவர், முஸ்லிம் பெண்கள் சரியான முறையில் வாழ்வியலைக் கொண்டு செல்லப் பயிற்றுவிக்கும் https://redefinedmuslimahcoaching.setmore.com/ என்ற இணையதளத்தை வணிக அடிப்படையில் துவக்கி, அதில் இணைந்துள்ள உறுப்பினர்களுக்கு வழிகாட்டுவதன் மூலம் - ஓர் ஆலோசகர் எனும் நிலையிலிருந்து, பயிற்சியாளர் எனும் தரத்திற்குத் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார்.
நிகழாண்டு அவரது விடுமுறைக் காலமான ஜூலை மாதத்தில், சொந்த ஊரான காயல்பட்டினம் வரும் இவர், எழுத்துத் துறையில் ஆர்வமுள்ள மக்களுக்காக சிறப்புப் பயிற்சி முகாமை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். அதில் இணைய விருப்பமுள்ளோர், https://forms.gle/BfMHL4nW5J3PZHQE7 என்ற இணையதள பக்கத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் தம்மையும் அதில் இணைத்துக் கொள்ளலாம். நிகழ்விடம், நேரம் உள்ளிட்ட விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |