சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், 10.05.2019. வெள்ளிக்கிழமையன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடத்தப்படவுள்ளது. இதில் கலந்துகொள்ள காயலர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
பேரன்புடையீர் - அஸ்ஸலாமு அலைக்கும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் ,எதிர் வரும் 10.05.2019 வெள்ளிகிழமை மாலை 6.00 மணியளவில், நமது மன்றத்தின் சார்பில் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன், மன்றத்தின் 58 வது பொதுக்குழுக் கூட்டம் ரியாத் பத்ஹா ஷிஃபா அல்-ஜெஸீரா பாலி கிளினிக் மூன்றாவது தளம் ஆடிடோரியத்தில் வைத்து நடைபெற உள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறிய தருகிறோம்.
நமது மன்ற சகோதரர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வதோடு, புதிய நண்பர்களுக்கும் தெரிவித்து, குறித்த நேரத்தில் இப்தார் நிகழ்ச்சியிலும், பொதுக்குழு கூட்டத்திலும் கலந்து கொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம். வஸ்ஸலாம்.
ஊடகக் குழு, RKWA.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|