தென் மாநில அளவில் நடத்தப்பட்ட ஐவர் கால்பந்துப் போட்டியில், காயல்பட்டினம் வி-யுனைட்டெட் அகடமி அணி கோப்பையை வென்றுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வீ-யுனைடெட் அகடமி கிளப் சார்பாக தென்மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி 15 மற்றும் 13 வயதுக்குற்பட்ட இளம் வீரர்களுக்காக தூத்துக்குடி ஏ.ஆர்.ஆர் மருத்துவமனை அனுசரனையில் கடந்த 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை மைதானத்தில் நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் கேரள மாநிலம் கண்ணுர் குலோபல் கால்பந்து கழகம், திருவனந்தபுரம் லீயோ 13 மேல்நிலைப்பள்ளி, தமிழகத்தை சேர்ந்த நெய்வேலி கால்பந்து அகடமி, விருதுநகர், மதுரை, தேனி முருகேசன் கால்பந்து அகடமி, கோவில்பட்டி பக்காடா கால்பந்து அகடமி, திருநெல்வேலி புனித சேவியர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி மற்றும் காயல்பட்டினம் என மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன.
இதன் இறுதிப்போட்டி கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் 13 வயதுக்குற்பட்ட பிரிவில் திருவனந்தபுரம் லியோ 13 மேல்நிலைப்பள்ளி அணி வெற்றிபெற்றது 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இரண்டாம் இடத்தை தூத்துக்குடி அணி பெற்றது.
15 வயதுக்குற்பட்ட பிரிவில் காயல்பட்டினம் வீ-யுனைடெட் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. நெய்வேலி அகடமி அணி இரண்டாமிடத்தை பெற்றன.
பரிசளிப்பு விழாவில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் ஹாஜி S.O. அபுல்ஹஸன் கலாமி, சமூக ஆர்வலர் கவிஞர் A.R. தாஹா, முஹியத்தீன் மெட்ரிக் பள்ளியின் செயலர் A.L. சம்சுத்தீன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பணப்பரிசுகளை வழங்கினார்கள். வெற்றிக்குமுனைந்த அணிகளுக்கு கால்பந்து ஆர்வளர்கள் சகோ. உ.ம.சாஹூல் ஹமீது, சகோ. சூப்பர் இப்றாஹீம், சகோ. சாதுலி ஆகியோர்கள் வழங்கினார்கள்.
போட்டி மற்றும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீ-யுனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் தலைவர் அலி ஃபைஸல் ஆலோசனையில், ஜஹாங்கிர், கஸ்ஸாலி, சதக்கதுல்லாஹ் மற்றும் அகடமியின் இளம் வீர ர்கள் செய்திருந்தார்கள், ஆசிரியர் மீராதம்பி தொகுத்து வழங்கினார்.
படங்கள்:-
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
|