நிகழாண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு, சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில், காயல்பட்டினத்திலுள்ள ஏழை-எளிய 172 குடும்பங்களுக்கு, தலா ரூபாய் 2 ஆயிரத்து 880 மதிப்பில், மொத்தம் ரூபாய் 4 லட்சத்து 95 ஆயிரத்து 360 செலவில் அத்தியாவசிய சமையல் பொருட்கள் உதவியாக வழங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் காயல் நல மன்ற பிரதிநிதி கே.எம்.டி.ஸுலைமான், சமூக ஆர்வலர்களான கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, கே.எம்.என்.முஹம்மத் உமர் ஆகியோரிணைந்து அப்பொருட்களைப் பயனாளிகளின் இல்லங்களுக்குத் தேடிச் சென்று வழங்கியுள்ளனர்.
தகவல்:
K.M.T.சுலைமான்
(பிரதிநிதி, சிங்கப்பூர் கா.ந.மன்றம்)
|