சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றம் சார்பில், இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையினால் எமது RKWA-ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 58-வது பொதுக்குழுக் கூட்டம் 10/05/2019 வெள்ளிக்கிழமையன்று புனித ரமழான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சியுடன் ஃபத்ஹா Shifa Al Jaseera Polyclinic Party Hall-ல் நடைபெற்றது.
மன்ற தலைவர் சகோதரர் P.M.S. முஹம்மது லெப்பை, மன்ற ஆலோசனை குழு உறுப்பினர் சகோதரர் ஹைதர் அலி, மன்றத்தின் முன்னால் தலைவர் சகோதரர் சுலைமான் லெப்பை மற்றும் சகோதரர் லால்பேட்டை நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இஃப்தார் நிகழ்ச்சியில், சுவை மிகுந்த கறி கஞ்சி, பருப்பு வடை, உளுந்துவடை, கடற்பாசி, Ice Cream,Fruit Salad மற்றும் தேநீர் பரிமாறப்பட்டன.
அதன் பின்னர் மஃரிப் தொழுகைக்குப் பிறகுச் சரியாக 7 மணியளவில் மன்ற பொது குழுக் கூட்டம் ஆரம்பமானது.
இந்நிகழ்ச்சியை மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் P.S.J. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் அழகான முறையில் தொகுத்து வழங்கினார்கள்.
சகோதரர் ஹாபிழ் சதக் ஷமீல் இறை வசனம் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்க, அடுத்து மன்ற உறுப்பினர் இன்னிசைத்தென்றல் சகோதரர். ஷேக் அப்துல் காதர் அவர்கள் இனிமையான இஸ்லாமியப் பாடல் ஒன்றைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
வரவேற்ப்புரை:
மன்றத்தின் தலைவர் சகோதரர் P.M.S. முஹம்மது லெப்பை அவர்கள் பொதுக்குழுவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.
தொடர்ந்து, கடந்த ஏழு (07) ஆண்டுகளாகப் புனித ரமழான் மாதத்தில் ஏழை எளியவர்களுக்கு ஸஹர் மற்றும் இஃப்தார் நேர உணவு தேவையைப் பூர்த்தி செய்யும் முகமாக Ramadan Food Packet Program (RFPP) செயல் படுத்தப்பட்டு வருகின்றது, அத்திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டு (2019 – 1440H) கிட்டத்தட்ட 363 குடும்பங்களுக்கு ஒரு மாத உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதையும், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் பல குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டமும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் கூறினார். இது போன்ற அனைத்து நன்மையான காரியங்களை நமது மன்ற உள்ளூர் பிரதிநிதி சகோதரர் தர்வேஸ் அவர்கள் சிறப்பாகச் செய்து வருவதோடு, அவர்களுக்கும் நமது RKWA-வின் சார்பாக நன்றியையும் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவம்:
மன்றத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் சகோதரர் ஹைதர் அலி அவர்கள் RKWA-வின் முக்கிய செயல்திட்டங்களில் ஒன்றான மருத்துவம் சார்ந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நகரில் இயங்கி வரும் உலக காயல் நல மன்றங்களின் கூட்டமைப்பான ஷிஃபா மூலம் நிதி ஒதுக்கும் முறையைப் பற்றி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்தார்.
பெண்கள் மற்றும் சிறுவர்/சிறுமியர்களும் மன்ற நல உதவிகளில் தங்கள் பங்களிப்பை வழங்கிடும் பொருட்டு அறிமுகப் படுத்தப்பட்ட Women And Kids Fund (WAKF) திட்டத்தின் மூலம் பெறப்பட்ட நிதியிலிருந்து மக்கள் மருந்தகத்திற்க்கும், நமதூர் KMT மருத்துவமனையில் அமையவிருக்கும் Kidney Dialysis Center-க்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைச் சுட்டி காட்டினார்.
Kayal Schools Welfare Projects:
புறநகர் மற்றும் உள்ளூரில் செயல் படும் அரசு மற்றும் அரசு உதவியுடன் இயங்கி வரும் பள்ளிகளுக்கு உதவும் Kayal Schools Welfare Projects பற்றிய விளக்கத்தை மன்றத்தின் துணைத் தலைவர் சகோதரர் S.A.T (கூஸ்) முஹம்மது அபூபக்கர் அவர்கள் வழங்கினார்கள். இத்திட்டத்தின் மூலம் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களின் தேவையைக் கேட்டறிந்து உதவிகள் செய்துள்ளதாகவும் கூறினார்.
நடப்பு ஆண்டிற்கான இத்திட்டத்தினை பள்ளி விடுமுறைக்குப் பின் எதிர்வரும் ஜூன் மாதம் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று தேவையான உதவிகளைச் செய்ய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
சிறுதொழில்:
தொடர்ந்து பேசிய மன்ற ஆலோசனை குழு உறுப்பினர் சகோதரர் M.E.L. நுஸ்கி, நகரில் சிறுதொழில் புரியும் நபர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கும் சிறுதொழில் சார்ந்த திட்டத்தினை பற்றி விளக்கமளித்தார்.
இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்களை, மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி சகோதரர் தர்வேஸ் அவர்கள் பரிசீலித்தது உறுதி அளித்த பின் உபகரணங்கள் பயனாளர்களுக்கு வழங்கப்படும்.
சகோதரர் ஹாஃபிழ் P.S.J. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் நன்றியுரையை தொடர்ந்து, துஆவுக்கு பின் பொதுகுழுவில் பங்குபெற்ற அனைத்து சகோதரர்களும் ஒன்றிணைந்து குழுப்படம் எடுக்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
58-வது பொதுக்குழு கூட்ட புகைப்படத் தொகுப்பு:
https://drive.google.com/open?id=1NywEtM3Ot6RgEDWrQk0EXfnnKiL0yzJv
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத் கா.ந.மன்றம் (RKWA) சார்பாக...
தகவல் & படங்கள்:
M.S.S.தைக்கா ஸாஹிப்
(ஊடகக் குழு)
|