நிகழும் 2019-20 கல்வியாண்டிற்கான – காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் கல்வி உதவித்தொகை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏழை மாணவ-மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து இக்ராஃ கல்விச் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில், கலை-அறிவியல் பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐடிஐ உள்ளிட்ட தொழிற்கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கான கல்வி உதவித்தொகை, காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் அனுசரணையுடன்,ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் அரசு மற்றும் அரசு சாரா (தனியார்) அமைப்புகளில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் வழிகாட்டப்படுகின்றன. அந்த அடிப்படையில் நடப்பு (2019-20) கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக, இக்ராஃ நிர்வாகத்தின் சார்பில் வழமை போல் பிரசுரம் வெளியிடப்பட்டு, நகரின் அனைத்து பள்ளிவாசல்கள், பொது நல அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.. அத்துடன் வெள்ளியன்று அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் விநியோகிக்கப்படவுள்ளது.
இக்ராஃ வெளியிட்டுள்ள பிரசுரம் வருமாறு:-
இதனைக் காண்போர் தயவு செய்து தங்களுக்கு தெரிந்த, நடப்பாண்டு கல்லூரிக்கு செல்லவிருக்கும் காயல் நகர மாணவ- மாணவியருக்கு இந்த தகவலை எத்தி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படம்:
A.தர்வேஷ் முஹம்மத்
(நிர்வாகி, இக்ராஃ கல்விச் சங்கம்)
|