காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், நிகழும் ஜூன் மாதம் 29ஆம் நாளன்று கூடவுள்ளதாக, இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்ற அதன் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் செயலர் பிரபு ஷுஅய்ப் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
இறையருளால் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழுக் கூட்டம் 26.05.2019. ஞாயிறு அன்று, TST Lok Road, Anson Houseல் உள்ள அமைப்பின் செயற்குக்குழு உறுப்பினர் ஏ.முஹம்மத் அபூபக்கர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வரவேற்புரை:
ஹாஃபிழ். ஏ.எல்.முஹம்மத் இர்ஷாத் அலீ கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பேரவைத் தலைவர் எஸ்.எம்.கே.முஹம்மத் இஸ்மாஈல் வரவேற்புரையாற்றினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
செயலாளர் பிரபு ஷுஅய்ப் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையை வாசித்தார்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
பேரவையின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை பொருளாளர் எல்.ஏ.கே.புஹாரீ சமர்ப்பித்தார்.
தீர்மானங்கள்:
நகர்நலன் குறித்த உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
1. நகர்நலப் பணிகளாற்றுவதற்கான நிதியாதாரத்தைத் திரட்டும் உண்டியல் திட்டத்தின் கீழ், அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்ட உண்டியல்களை விரைவில் சேகரித்து, அவற்றிலிருந்து பெறப்படும் தொகை மன்றத்தின் வரவு கணக்கில் சேர்த்திட முடிவெடுக்கப்பட்டது
2. மருத்துவ உதவி கூட்டமைப்பான ஷிஃபா அமைப்பின் மருத்துவ விண்ணப்பங்களுக்கு உதவ ரூபாய் 40 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.
3. இக்ராஃ கல்வி சங்கத்தின் IQRA School Uniform Distribution Program 2019 திட்டத்திற்கான உதவித்தொகை ரூபாய் 28 ஆயிரம் ஒதுக்கப்பட்டது.
4. காயல்பட்டினத்தைச் சேர்ந்த - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள பயனாளிகளுக்கு சிறுதொழில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு மட்டும் உபகரணங்கள் வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது.
5. பேரவையின் தையல் தொழில் அமைப்பு KUF HONG KONG GARMENTS & TAILORINGயின் நடப்பு நிர்வாக செயற்பாடுகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டு, அவ்வமைப்பின் உள்ளூர் நிர்வாகத்தில் சிறு மாற்றங்கள் செய்திட முடிவெடுக்கப்பட்டது.
6. எதிர்வரும் ஈதுல் ஃபித்ர் - நோன்பு பெருநாளை முன்னிட்டு நமதூர் மக்கள் அனைவரையும் ஒன்றாகக் காணச் செய்து, மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதற்காக, பெருநாள் அன்று மாலை Tsim Sha Tsui Middle Road Park (Sindhi park)ல் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
7. பேரவையின் 11ஆவது பொதுக்குழுக்கூட்டத்தை, இன்ஷாஅல்லாஹ் ஜூன் மாதம் 29ஆம் நாள் சனிக்கிழமை இரவு மஃரிப் தொழுகைக்குப் பின், ஹாங்காங் கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. மேலும், இதனையே அழைப்பாக ஏற்றுக்கொண்டு அணைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்துக்கொள்ளவும் வேண்டுகோள் விடுவிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி:
ஹாஃபிழ் ஏ.எல்.முஹம்மத் இர்ஷாத் அலீ நன்றி கூற, ஹாஃபிழ் எம்.எம்.சுல்தான் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் கலந்துகொண்டனர். நோன்பு துறந்த பின், மஃரிப் ஜமாஅத் தொழுகையை ஹாஃபிழ் எம்.எம்.சுல்தான் வழிநடத்தினார். கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தொழுகைக்குப் பின் - செயற்குக்குழு உறுப்பினர் ஏ.முஹம்மத் அபூபக்கர் குடும்பத்தாரின் உபசரிப்பில் சுவையான பதார்த்தங்களைக் கொண்டு இஃப்தார் – நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|