சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 42-வது பொதுக்குழு கூட்டம் இஃப்தார் நிகழ்வுடன் கடந்த 17.05.2019 வெள்ளிக்கிழமையன்று ஜித்தா ஷரஃபிய்யாவில் அமைந்துள்ள ஆர்யாஸ் உணவகத்தில் இனிதே நடந்தேறியது.
முதல் அமர்வு:
மாலை 06:20 மணிக்கு துவங்கிய பொதுக்குழுவிற்கு மன்ற ஆலோசகர் சகோ. குளம் அஹ்மது முஹ்யித்தீன் தலைமை ஏற்றார். ஊரிலிருந்து வருகை தந்திருந்த சகோதரர்கள் அலாவுத்தீன், ஒய்.எம்.அஹ்மது காஸிம், முஹம்மது ழாஃபிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சகோ.எம்.எம்.எஸ்.ஷாஜஹான் கிராஅத் ஓதினார். சகோ. எம்.ஏ.அபுல்ஹசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தலைமையுரை:
நமது மன்றத்தின் மூலம் நாம் ஆற்றி வரும் சேவைகளைப் பற்றியும் மேலும் நகரின் சில முக்கிய தேவைகளைக் குறித்த விபரங்களையும் தலைமையுரையாக தந்தார் சகோ.குளம் அஹ்மது முஹ்யித்தீன்.
தொடர்ந்து காயல் காந்த குரலார் சகோ. எம்.எஃப்.யாகூத்துல் அர்ஷ் உடைய அருமையான இஸ்லாமிய பாடலுடன் முதல் அமர்வு நிறைவுற்றது.
இஃப்தார்:
காயல் பாரம்பரியத்துடன் கூடிய சிறப்பானதொரு இஃப்தார் ஏற்பாடாகியிருந்தது. இஃப்தார் முடித்து இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டு மஃரிப் தொழுகையும் நிறைவேற்றிய பின் அனைவரும் இரண்டாம் அமர்வுக்கு ஆயத்தமாயினர்.
இரண்டாம் அமர்வு:
மஃரிப் தொழுகைக்குப்பின் இரண்டாம் அமர்வு ஆரம்பமானது. அதில், கூட்டத்தின் முக்கிய பொருளான நகரில் இறைஇல்லப்பணியிலிருக்கும் இமாம் மற்றும் முஅத்தின்களுக்கான உதவி குறித்து கூட்டத்தலைவர் எடுத்துக்கூறினார்.
கடந்த கூட்டறிக்கை:
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற செயற்குழு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் நிமித்தம் நடந்தேறிய மன்றப்பணிகள், இன்றைய பொதுக்குழுவின் கூட்டப் பொருள் பற்றிய விபரங்களையும் எடுத்துக் கூறினார் மன்றத்தலைவர் சகோ.பிரபு எஸ்.ஜெ.நூர்தீன் நெய்னா.
கருத்துரை:
நகரில் தேவையுடையோருக்கு நம் மன்றம் ஆற்றி வரும் சேவைகளில் ரமலான் காலங்களில் நாம் செய்யும் இறையில்லப் பணியாளர்களுக்கான சேவையும் ஒன்று. கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இவ்வுதவி திட்டம் அல்லாஹ்வின் உதவியால் இன்றும் தொடர்கிறது. இமாம், முஅத்தின்களின் தற்கால வாழ்வாதாரங்களை விரிவாக எடுத்துக்கூறி அவர்களுக்கு நம் உதவியின் அவசியத்தையும் வலியுறுத்தி அமர்ந்தார் மன்ற ஆலோசகர் சகோதரர் எம்.ஏ.செய்யிது இப்ராஹீம்.
தொடர்ந்து கருத்துரைத்த சகோதரர் அமீர் சுல்தான் தர்மம் செய்வதின் முக்கியத்துவம் குறித்தும், இப்புனித மாதத்தில் நாம் செய்யும் உதவிகளின் சிறப்புகள் பற்றியும் அதன் மூலம் நாம் பெரும் வெகுமதிகள் குறித்தும் இவ்வுதவிகள் பெற்றோர் அடையும் மகிழ்வு பற்றியும் எடுத்துக்கூறினார்.
நிதிநிலை:
மன்றத்தின் பொது நிதி இருப்பு, சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் கடந்த கூட்டத்தில் ஒதுக்கப்பட்ட உதவித் தொகைகள் பற்றிய விபரங்களை விரிவாக சமர்ப்பித்தார் மன்றப்பொருளாளர் சகோ.முஹம்மது ஆதம்.
இக்ரஃ குறித்து:
காயல் நல மன்றங்களின் கல்விக் கூட்டமைப்பான இக்ரஃ உடைய கல்வி உதவிகுறித்த விபரங்கள், ஏழை மாணவர்களுக்கான சீருடை வழங்கும் திட்டம் மற்றும் இதர பணிகளைப் பற்றி தெளிவு படுத்தினார் நமது மன்றத்தின் இக்ரஃ பொறுப்பாளர் சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ்.
ஷிஃபா குறித்து:
உலக காயல் நல மன்றங்களின் மருத்துவக் கூட்டமைப்பான ஷிஃபாவின் பணிகள் குறித்தும், ஷிஃபா மற்றும் சில காயல் நற்பணி மன்றங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள DIALYSIS CENTER குறித்த செய்திகளையும் விரிவாக தந்தார் மன்றச்செயலர் சகோ.சீனா மொகுதூம் முஹம்மது.
மருத்துவ உதவி:
ஷிஃபா மூலம் பெறப்பட்ட மருத்துவ மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது. கிட்னி, கேன்சர், ஆஸ்த்மா, இருதயம், ஹிர்னியா, தொடையில்கட்டி, ஆஞ்சியோகிராம் மற்றும் தொடர் மருத்துவம் என பதிமூன்று மருத்துவ தேவையுடையோருக்கான உதவிகள் அறிவிக்கப்பட்டு அவர்கள் பரிபூரண நலம் பெற ஏகனிடம் பிரார்த்திக்கப்பட்டது.
மன்றப்பணிகள் குறித்து:
கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து முன்னிலை வகித்து சிறப்பித்துத்தந்த மூவரும் மன்றத்தின் பணிகளை வெகுவாக பாராட்டியதோடு மன்றத்தின் சேவைகள் மேலும் தொடர இறையை வேண்டினர்.
நன்றியுரை:
இச்செயற்குழு இனிதே நிறைவுற அருள்புரிந்த இறைவனை போற்றி, கலந்து கொண்ட உறுப்பினர்கள், சிறப்பழைப்பாளர்கள், கூட்ட அனுசரணையாளர்கள், சுவையானதொரு காயல் கஞ்சியுடன்கூடிய இஃப்தார், ஸஹர் உணவு என அனைத்தையும் செவ்வனே ஏற்பாடு செய்து தந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார் சகோ.மஹ்மூது.
மன்றத்தின் கோரிக்கையை ஏற்று நம் நகரின் இறையில்லப்பணியாளர்களுக்காக மனமுவந்து தாராள பங்களிப்பு செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மன்றத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டு அவர்களுக்காக பிரார்த்திக்கப்பட்டது.
இறுதியாக செய்யிது முஹ்யித்தீன் ஆலிம் அவர்களின் இறைவேண்டல் மற்றும் கஃப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
தகவல் மற்றும் படங்கள்:
செய்திப் பிரிவு
ஜித்தா காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
17.05.2019.
|