காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளிக்குப் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதன் தலைவராக இருந்த எஸ்.கே.இசட்.ஆப்தீன் அவர்கள் காலமானதையடுத்தும், பள்ளியின் நிர்வாகக் குழுவினது பொறுப்புக் காலம் நிறைவுற்ற நிலையிலும் – புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம், 06.06.2019. வியாழக்கிழமையன்று 10.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் – ஹாஜி வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி தலைமையில் நடைபெற்றது.
பங்கேற்றோர் நீண்ட கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பள்ளியின் புதிய தலைவராக ஹாஃபிழ் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம், செயலாளராக எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர், பொருளாளராக பீ.எம்.டீ.ஹபீப் முஹம்மத் ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
துஆ, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், பள்ளி மஹல்லா ஜமாஅத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
|