கேரள மாநிலம் மலபார் காயல் நல மன்றத்தின் (மக்வா) சார்பில், கடந்த ரமழானில் இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி – கல்விச் சாதனையாளர்களுக்குப் பரிசளிப்புடன் நடந்தேறியுள்ளது. காயலர்கள் இதில் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் ஏ.எஸ்.ஐ.முஹம்மத் ஸிராஜ் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும்.
எல்லாம் வல்ல ஏக நாயன் அல்லாஹ்வின் உதவியால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மற்றும் குடும்ப ஒன்று கூடல் நிகழ்ச்சி 26.05.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை கேரள மாநிலம் கோழிக்கோடு கோட்டபிரம்பாவில் உள்ள சரோஜ் பவனில் எமது அமைப்பின் தலைவர் S. சேக் சலாஹுத்தீன் அவர்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..
அரங்க நிகழ்ச்சிகளுக்கு மன்றத்தின் துணைத் தலைவர் N.M. முஹ்யித்தீன் அப்துல் காதர்,மன்ற செயலாளர் A.S.I. முஹம்மது ஸிராஜ், கௌரவ ஆலோசகர்கள் சாளை S.L.அபுல் ஹஸன் (அமீன் டூல்ஸ்) மற்றும் M.K. நெய்னா முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற பொது குழு உறுப்பினர் S.N. மீரான் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
கிராத்
சேகு சுலைமான் ஆதில் அவர்களின் மகனார் முஹம்மது ஹபீஸ் இறைமறை ஓதி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்.
வரவேற்புரை
நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், அவர்கள் தம் குடும்பத்தினர் அனைவரையும் மன்ற செயலாளர் A.S.I. முஹம்மது ஸிராஜ் வரவேற்று பேசினார்.
தலைமையுரை
மன்ற தலைவர் S.சேக் சலாஹுத்தீன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.அவர் தமது உரையில் மக்வாவின் நான்காவது பருவத்தின் செயல்பாடுகளை பற்றி விளக்கி பேசினார். நோன்பு திறப்பு நிகழ்ச்சி கடந்த ஆண்டு நிஃபா வைரஸ் மூலம் நடத்த முடியாமல் போனதையும் நினைவு கூர்ந்தார். எல்லாம் வருடமும் சிறப்பாக நடைபெற தூஆ செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.மக்வாவின் வளர்ச்சி பாதைக்கு அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என வலியுறுத்தினார்.
மனமகிழ் குழந்தைகள் நிகழ்ச்சி
நம் மன்ற உறுப்பினர்களின் குழந்தைகள் பங்கேற்ற இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சிகள் மிக உற்சாகமாக நடைபெற்றது.பங்கு பெற்ற அனைத்து சிறுவர், சிறுமியர்கள் தங்களின் திறமைகளை வெளிபடுத்தி வந்திருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தனர். குழந்தைகளின் பல்சுவை நிகழ்ச்சிகள் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. குழந்தைகள் நிகழ்ச்சியை மன்ற செயலாளர் A.S.I. முஹம்மது ஸிராஜ் தொகுத்து வழங்கினார்.
பரிசு வழங்கல்
குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
சாளை S.L.அபுல் ஹஸன், சீனா S.I. மொகுதூம் முஹம்மது, K.S.காதர் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்பித்து தந்தனர்.
அடுத்ததாக இக் கல்வியாண்டில் SSLC, +2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாண,மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.பரிசுகளை மஃஸுக்(அமீன் டூல்ஸ்), அப்துல் பாஸித் மற்றும் S.L.சாகுல் ஹமீது (அமீன் டூல்ஸ்), ஆகியோர் வழங்கி சிறப்பித்து தந்தனர்.மேலும் மன்ற செயற்குழு கூட்டத்தில் அதிக அளவில் பங்கு பெற்றதற்கான சிறப்பு பரிசு T.S.சாஹிப் தம்பி அவர்களுக்கும், அதிகமான பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்றத்திற்கான சிறப்பு பரிசு S.A.சேக் அப்துல் காதர் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.இப்பரிசினை எமது மன்ற கெளரவ ஆலோசகர் M.K. நெய்னா முஹம்மது அவர்கள் வழங்கி சிறப்பித்து தந்தார்.
நோன்பு திறப்பு நிகழ்ச்சி
கூட்ட நிகழ்வுகளை தொடர்ந்து இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு அனைவரும் அழைக்கப்பட்டனர்.
அங்கு பேரீச்சம் பழம், காயல் கறிக்கஞ்சி, பருப்பு வடை, ஜூஸ் என உணவு ஏற்பாட்டு குழுவினரால் விமர்சையாகவும், சுவையாகவும், உணவு பதார்த்தங்கள் தயார் செய்யப்பட்டு அனைவருக்கும் அன்புடன் பரிமாறப்பட்டது.
மஃரிப் தொழுகை
அதனை தொடர்ந்து மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக தொழப்பட்டது. சுவைமிகு தேனீர் அனைவருக்கும் வழங்கப்பட்டு இராண்டாம் அமர்வு தொடங்கியது.
அறங்காவலர் உறை
ஷிஃபா வின் நமது மன்ற அறங்காவலர் சாளை M.A.K. முஹம்மது உஸ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார். ஷிஃபா வின் தற்போதைய செயல்பாடுகளை மிகவும் சிறப்பாக விளக்கி பேசினார்.நமதூரில் டாயாலிஸ் சென்டர் தொடங்க இருப்பதையும், அதற்காக வேண்டி வரும் பொருளாதாரத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்.டயாலிஸிஸ்க்கு வேண்டி நாம் அளித்த பொருளாதார பங்களிப்பயும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.மேலும் கேரளா மழை வெள்ளத்தில் பாதிப்பு அடைந்த மக்களுக்கு வீடுகள் சீரமைப்பு பணிகளின் விபரங்களையும் விளக்கமாக எடுத்துக்கூறினார்.
சிறப்புரை
மன்ற துணை தலைவர் N.M.முஹியீத்தீன் அப்துல் காதர் சிறப்புரை ஆற்றினார். மக்வாவின் வளர்ச்சிகளுக்கு உறுப்பினர்களின் ஆலோசனைகள் மிகவும் அவசியமாகும் என்பதை வலியுறுத்தினார்.பொருளாதரத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை.காரணம் பொருளாதாரம் தேவைபடும் பொதுதெல்லாம் நம் மக்கள் தாமாகவே முன்வந்து மிகவும் தாராளமாக உதவுவதை சிலாகித்து நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.ஊரில் கேன்சர் நிகழ்ச்சியை நம் மன்றம் நடத்தியதையும் நினைவுபடுத்தினார்.
நன்கொடை சேகரிப்பு
மக்வாவின் மருத்துவ பணிகளுக்காக இக் கூட்டத்தில் நன்கொடை சேகரிக்கப்பட்டது.கூட்டத்தில் பங்கேற்ற ஆண்களும்,பெண்களும் ஆர்வத்துடன் நன்கொடை வழங்கினர். அதை மன்ற பொருளாளர் மொகுதூம் மீரா சாஹிப் (பாப்புலர்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு முன்பு வழங்கப்பட்ட மக்வா உண்டியல்களை கொண்டுவந்தவர் களிடமிருந்து பொருளாதாரம் சேகரிக்கபட்டது.
விருந்தோம்பல்
இரவு உணவிற்காக இடியாப்ப பிரியாணியும்,ஜாமும் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.காலை 8 மணிக்கு துவங்கி கடும் வெயிலையும் பொருட்பாடுத்தாமல் அயராது பணி செய்து, மிக ருசியாக சமைத்து அனைவருக்கும் பரிமாறிய உணவு ஏற்பாட்டுக்குழு தலைவர் ஆப்தீன் பாய் மற்றும் உமர் அப்துல் காதர் (லக்கி), சாஹிபு தம்பி ஆகியோரை கூட்டத்திற்கு வந்தவர்கள் பாராட்டி தூஆ செய்தனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருவரையொருவர் சந்தித்து கொள்ளும் இந்த நிகழ்வில் மகிழ்ந்து போன நம் மன்ற உறுப்பினர்களின் சந்தோஷமான தருணங்கள் பார்ப்பவர் மனதை கொள்ளை கொண்டது.
நன்றியுரை
இறுதியாக S.N.மீரான் நன்றி கூற ... இரவு 8.30 மணியுடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்
நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட படங்களை,
https://photos.app.goo.gl/PvUwFxW95VdfzGrC7
என்ற இணைப்பில் சொடுக்கிக் காணலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
T.S.ஸாஹிப் தம்பி
(செய்தி தொடர்பாளர், மக்வா) |