மறைந்த காயல் பிறைக்கொடியான் கவிஞர் எஸ்.எம்.பி.மஹ்மூத் ஹுஸைன் இயற்றிய பாடல்களை – கவிஞர் ஏ.ஆர்.தாஹா ஒருங்கிணைப்பில், “தேன் சொட்டும் தீன் பாக்கள்” எனும் தலைப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நூலும், குறுந்தகடும் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பதிப்பில் வராத அவரது இன்னும் பல பாடல்கள் – ஏ.ஆர்.தாஹா ஒருங்கிணைப்பில் மீண்டும் தொகுக்கப்பட்டு, “தித்திக்கும் தேன்பாக்கள்” எனும் தலைப்பில் நூல் அச்சிடப்பட்டுள்ளது.
அதன் வெளியீட்டு விழாவும், காயல்பட்டினத்திலுள்ள இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைத்துச் செயல்படும் “காயல் இலக்கிய முற்றம்” குழும அறிமுக விழாவும் – காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) வளாகத்தில், 16.08.2019. வெள்ளிக்கிழமையன்று 17.00 மணியளவில் நடைபெற்றது.
கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் தலைமை தாங்கினார். எஸ்.இ.முஹம்மதலி ஸாஹிப், வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, வட்டம் ஹஸன் மரைக்கார், எம்.எஸ்.முஹம்மத் அபூபக்கர், என்.டீ.பாதுல் அஸ்ஹப் ஜுமானீ, எம்.எச்.ஷாஜஹான், ஏ.எல்.இர்ஷாத் அலீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏ.எல்.முஹம்மத் நிஜார் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ வரவேற்றார். கவிஞர் ஏ.ஆர்.தாஹா நூல் அறிமுகவுரையும், இலக்கிய முற்றம் குழும அறிமுகவுரையும் ஆற்றினார்.
சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நூலின் துவக்கப் பிரதிகளை வெளியிட, நகரப் பிரமுகர்களான எஸ்.எம்.உஸைர், எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல், நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, எஸ்.எஸ்.ஷாஹுல் ஹமீத், கவிமகன் காதர், கே.அப்துர்ரஹ்மான் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
கவிஞர் எஸ்.ஏ.நெய்னா இயற்றிய வாழ்த்துக் கவிதையை, காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் வாசித்து, சிற்றுரையாற்றினார்.
மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வாழ்த்துரையாற்றினார்.
‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இதில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, காயல் இலக்கிய முற்றம் குழும அங்கத்தினரும், இளைஞர் ஐக்கிய முன்னணி அங்கத்தினரும் இணைந்து செய்திருந்தனர்.
|