இந்தியா இன்று தனது 65 வது சுதந்திரதினத்தை கொண்டாடுகிறது.
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
அதனை தொடர்ந்து மாநில மக்களுக்கு, முதலமைச்சர் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
முன்னதாக அரங்கிற்கு வந்த முதலமைச்சருக்கு தலைமைச் செயலாளர் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும்
கேரளா பகுதி தலைமைத் தரைப்படைத் தலைவர், சென்னை கடற்படை பொறுப்பு அதிகாரி, தாம்பரம் வான்படை அதிகாரி, கடலோரக் காவல் படை கமாண்டர் (கிழக்கு மண்டலம்), காவல் துறை இயக்குநர், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையாளர் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் திறந்தவெளி ஜீப்பில் காவல் துறையின் அணி
வகுப்பினை முதலமைச்சர் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து விருதுகள் வழங்கப்பட்டன. அதன் விபரம் வருமாறு:-
துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது (திருச்சி ஆர்.டி.ஓ. சங்கீதா) மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காகச் சிறப்பாகத்
தொண்டாற்றியவர்களுக்கான ஆறு விருதுகள் (டாக்டர் துரைசாமி, திருச்சி மன்னார்புரம் விழிஇழந்த மகளிர் மறுவாழ்வு இல்லத்தை சேர்ந்த பிரியாதியோடர், பாளையங்கோட்டை பிஷப் ஜார்ஜன்ட் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி சார்பில் அதன் தலைவர் சந்திரசேகரன், அதிக அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த திருச்சி தனியார் நிறுவனத்தை சேர்ந்த பொன்னுதுரை, தேனி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் தேன் மொழி ஆகியோருக்கு), மகளிர் நலனுக்காகச் சிறப்பாகத் தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான இரண்டு விருதுகள் (வேலூர் மாவட்டம் அரியூர் கிராம வளர்ச்சி தொண்டு நிறுவன தலைவர் மணியன் புதுக்கோட்டை ரெகோ திட்ட இயக்குனர் பரிபூரணலில்லி ஆகியோருக்கு) வழங்கப்பட்டன.
பின்னர் கோட்டை நுழைவாயில் அருகே உள்ள பந்தலில்
அமர்ந்திருந்த மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
புகைப்பங்கள்:
மாலைமலர்
|