இந்தியாவின் 65ஆவது சுதந்திர தினத்தையொட்டி, காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் இன்று காலை 08.00 சுதந்திர தின விழா நடைபெற்றது.
கல்லூரியின் நிறுவனர் தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் விழாவிற்குத் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம், துணைச் செயலாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், அறக்கட்டளை அறங்காவலர் ஹாஜி ஞானி முஹம்மத் இப்றாஹீம், நிர்வாக அதிகாரி முனைவர் ஹம்ஸா முகைதீன், முதல்வர் முனைவர் மெர்ஸி ஹென்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மோட்டார் வாகன ஆய்வாளர் எம்.கனகவள்ளி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேசிய கொடியேற்றினார். பின்னர் கல்லூரி மாணவியரால் கொடி வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது.
பின்னர் நடைபெற்ற அரங்க நிகழ்ச்சியை கல்லூரியின் பி.பி.ஏ. முதலாமாண்டு மாணவி ஏ.ஷர்மிளா பானு கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து கல்லூரியின் மாணவியர் பேரவை தலைவியும், பி.காம். மூன்றாமாண்டு மாணவியுமான பி.முத்து கதீஜா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பின்னர், சிறப்பு விருந்தினருக்கு விழா தலைவர் நினைவுப் பரிசு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் எம்.கனகவள்ளி சிறப்புரையாற்றினார். மதம், ஜாதி வேற்றுமைகளைத் தாண்டி இந்திய குடிமக்களிடையே இருக்க வேண்டிய தேசிய அளவிலான ஒற்றுமை, பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் தனதுரையில் தெரிவித்தார்.
பின்னர், கல்லூரியின் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாமாண்டு மாணவி எஸ்.ஓ.கதீஜா ஃபஸீலா ஆங்கிலத்திலும், பி.எஸ்ஸி. கணிதம் இரண்டாமாண்டு மாணவி எச்.ஜவாஹிரா தமிழிலும் உரையாற்றினர்.
பின்னர் பி.காம் மூன்றாமாண்டு மாணவி பி.முத்து கதீஜா குழுவினரால் தேச ஒற்றுமைப் பாடல் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பி.எஸ்ஸி. கணிதம் இரண்டாமாண்டு மாணவி எம்.ஏ.வஜீஹா யாஸ்மின் ஸோலோ பாடல் பாடினார். பி.காம். மூன்றாமாண்டு மாணவி எம்.கிருஷ்ணவேணி குழுவினர் நடனமாடினர்.
நிறைவாக, கல்லூரியின் மாணவியர் பேரவை துணைத்தலைவரும், பி.காம். இரண்டாமாண்டு மாணவியுமான என்.எம்.ஃபாத்திமா ரிஃப்கா நன்றி கூற, பி.எஸ்ஸி. கணிதம் மூன்றாமாண்டு மாணவி பி.எஸ்.என்.ஸலீமா ஆஷிக்கா துஆவுடன் விழா நிறைவுற்றது.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |