இந்தியாவின் 65ஆவது சுதந்திர தினத்தையொட்டி, காயல்பட்டினம் கே.வி.ஏ.டி. புகாரி ஹாஜி அறக்கட்டளை சார்பில் அன்று காலை 09.00 மணிக்கு கொடியேற்று விழா, ‘முத்துச்சுடர்‘ மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ தலைமையிலும், கே.வி.ஏ.டி. அறக்கட்டளை தலைவர் ஹாஜி கே.வி.ஏ.டி. கபீர் தலைமையில் நடைபெற்றது.
மாணவர் எம்.எம்.அப்துல் காதிர் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ தேசிய கொடியேற்றி, சுதந்திர தின சிறப்புரை வழங்கினார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற நிகழ்வுகள், அதில் முஸ்லிம் சமுதாயத்தின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு செய்திகளை அவர் தனதுரையில் தெரிவித்தார்.
நிறைவாக தேசிய கீதம் பாடப்பட்டு, துஆவுடன் விழா நிறைவுற்றது. கே.வி.ஏ.டி. அறக்கட்டளையின் மக்கள் தொடர்பாளர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
இவ்விழாவில் நகரின் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
களத்தொகுப்பு மற்றும் படம்:
M.W.ஹாமித் ரிஃபாய்,
காயல்பட்டினம்.
படங்கள்:
ஃபாழில் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |