திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க சிங்கப்பூர் கிளை சார்பில், 13.08.2011 சனிக்கிழமை மாலை இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி சிங்கப்பூர் மஸ்ஜித் பென்கூலன் மூன்றாம் தளத்தில் நடத்தப்பட்டது.
உயர்கல்வி மற்றும் பட்டப்படிப்புகள் வழங்குவதில் 60 ஆண்டுகள் சாதனைகள் படைத்த இக்கல்லூரியின் சிங்கப்பூர்வாழ் முன்னாள் மாணவர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரிலுள்ள நேபால் நாட்டின் தூதரகத்திலிருந்து வழக்கறிஞர் எம்.என்.சுவாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சங்கத்தின் புரவலரும், சென்னை தாஜ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான தொழிலதிபர் டாக்டர் சலீம் பாஷாவுக்கு, சிங்கப்பூர் மன்றத்தின் நிறுவனரும், ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் சால்வை அணிவித்து சங்கைப்படுத்தினார்.
ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க சிங்கப்பூர் கிளை செயலாளர் அப்துல் சுபஹான் வரவேற்புரை வழங்க, சங்கத்தின் வருங்காலத் திட்டங்களைப் பற்றி சங்கத் தலைவர் முஹ்யித்தீன் அப்துல் காதர் சிறப்புரையாற்றினார்.
சமய நல்லிணக்கத்திற்கும், ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எடுத்துக்காட்டாக இந்நிகழ்ச்சி நடந்தேறியது.
தகவல்:
முஹ்யித்தீன் அப்துல் காதர்
(சங்கத் தலைவர்) |