நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு, சிங்கப்பூரில் குடும்பத்தினருடனின்றி தனித்து வசிக்கும் (Bachelors) மன்ற உறுப்பினர்களுக்காக, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் நிறுவனரும், ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் 07.08.2011 அன்று மாலை இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிங்கப்பூரில் ரமழான் தராவீஹ் - சிறப்புத் தொழுகையை வழிநடத்துவதற்காக சென்றிருக்கும் ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் துணை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ, தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர் தவிர, காயல்பட்டினம் கறிகஞ்சி, வடை வகைகள், குளிர்பானம், பழக்கூழ், இடியாப்ப பிரியாணி என பலவகை உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது.
இறுதியாக, அங்கேயே மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தொழுகையை வழிநடத்தினார்.
14.08.2011 அன்று மாலையில், சிங்கப்பூர் காயல் நல மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் இல்லத்தில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், காயலர்கள் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும், பேரீத்தம்பழம், தண்ணீர் தவிர, ஆப்பம், இடியாப்பம், இறைச்சி வகைகள், குளிர்பானம், தேனீர், பழ வகைகள் என பலவகை உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டிருந்தது.
தகவல் மற்றும் படங்கள்:
ஹரீஸ்,
சிங்கப்பூர். |