இந்தியாவின் 65ஆவது சுதந்திர தினத்தையொட்டி, காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில் 15.08.2011 அன்று காலை 08.00 மணிக்கு கொடியேற்று விழா நடைபெற்றது. பள்ளியின் பட்டதாரி ஆசிரியை ஏ.நூர்ஜஹான் தேசிய கொடியேற்றினார்.
விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த பள்ளி ஆசிரியையர், மாணவியர் மற்றும் பெற்றோரை பள்ளி தலைமையாசிரியை எம்.ஜெஸீமா வரவேற்றார்.
பள்ளி மாணவியரின் உரைகளைத் தொடர்ந்து, பள்ளியின் பட்டதாரி ஆசிரியை கே.பீர் ஃபாத்திமா பீவி நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
களத்தொகுப்பு:
M.W.ஹாமித் ரிஃபாய்,
காயல்பட்டினம்.
படங்கள்:
ஃபாழில் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |