நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு, 15.08.2011 அன்று இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) சார்பில், இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள புகாரீ அன்கோ இல்லத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மன்றத் தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காவாலங்கா உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
பேரீத்தம்பழம், தண்ணீர் பாட்டில், காயல்பட்டினம் கறிகஞ்சி, உளுந்து வடை, இலங்கை ரோல்ஸ், பஜ்ஜி, குளிர்பானம், தேனீர் என பலவகை உணவுப் பதார்த்தங்கள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
இஃப்தார் நிகழ்ச்சி நிறைவுற்றதும், மஃரிப் தொழுகை அங்கேயே ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. மவ்லவீ ஹாஃபிழ் மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ தொழுகையை வழிநடத்தினார்.
தொழுகை நிறைவுற்றதும், அனைவரும் தத்தம் நண்பர் குழுவுடன் இணைந்து நகர் நடப்புகள் குறித்து கலந்துரையாடிய பின் அவரவர் இல்லம் திரும்பினர்.
தகவல் மற்றும் படங்கள்:
ஹாஜி B.M.ரஃபீக்,
கொழும்பு, இலங்கை. |