இந்தியாவின் 65ஆவது சுதந்திர தினத்தையொட்டி, காயல்பட்டினம் முஹ்யித்தின் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் 15.08.2011 அன்று காலை 08.00 மணிக்கு கொடியேற்று விழா நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் ஸ்டீஃபன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர் தேசிய கொடியேற்றினார்.
இவ்விழாவில் பள்ளியின் துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான், ஹாஜி துளிர் எம்.எல்.ஷேக்னாலெப்பை ஆகியோரும், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
S.R.B.ஜஹாங்கீர் மூலமாக,
K.M.T.சுலைமான்,
துணைச் செயலாளர்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி,
காயல்பட்டினம். |