"அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும்'' என, அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் முனுசாமி பதிலளித்து பேசியதாவது: "மாநகராட்சி போலவே நகராட்சி, பேரூராட்சிகளிலும் பாதாள சாக்கடைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குடியாத்தம் நகரில், 58 கோடி ரூபாயிலும், பேர்ணாம்பட்டில், 27 கோடியே 5 லட்சம் ரூபாயிலும் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, திட்டம் நிறைவேற்றப்படும்.
கடந்த ஆட்சியில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று திட்டங்களை செயல்படுத்தியதால் திண்டுக்கல், சிவகங்கை உள்பட பல்வேறு இடங்களில், பாதாள சாக்கடைத் திட்டம் அரை குறையாக உள்ளது. இந்த ஆட்சியில், முறையாக ஆய்வு செய்யப்பட்டு, பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும். ஐந்தாண்டுகளில், மாநகராட்சி மட்டுமல்ல நகராட்சி, பேரூராட்சிகளிலும் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும்'. இவ்வாறு அமைச்சர் முனுசாமி தெரிவித்தார்.
நன்றி:
தினமலர் (17.08.2011) |