இந்த ஆண்டு, மேலும் 2,000 பேர் ஹஜ் பயணம் செல்ல, அனுமதிக்க வேண்டும்'' என, மத்திய அரசிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளதாக, அமைச்சர் முகமது ஜான் தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தின்போது, ""தமிழகத்திலிருந்து ஹஜ் செல்வோர் வசதிக்காக, மதுரையிலிருந்து விமானங்கள் இயக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?'' என்ற கேள்வியை, மனிதநேய மக்கள் கட்சியின் உறுப்பினர் ஜவாஹிருல்லா எழுப்பினார்.
அமைச்சர் முகமது ஜான் பதிலளித்துப் பேசியதாவது:
ஹஜ் பயணிகளுக்காக, மதுரையிலிருந்து விமானங்களை இயக்குவதற்கு, சர்வதேச விமான நிலையமாகச் செயல்பட வேண்டும். சர்வதேச பயணத்தைக் கையாளுவதற்கான வசதிகளும், மதுரை விமான நிலையத்தில் இல்லை. இது தொடர்பாக, மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இந்த ஆண்டு, மேலும் 2,000 பேர் ஹஜ் செல்ல அனுமதிக்க வேண்டும் என, மத்திய அரசை முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு அமைச்சர் முகமது ஜான் தெரிவித்தார்.
நன்றி:
தினமலர் (17.08.2011) |