காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின்
நிர்வாக அதிகாரி முனைவர் ஹம்ஸா முகைதீன் இன்று - காயாமொழி அருகே நடந்த விபத்து ஒன்றில் காலமானார். அவருக்கு அவருக்கு வயது 65.
கல்லூரியில் ஜூன் 22 அன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிர்வாக அதிகாரி உரை நிகழ்த்தியப்போது எடுக்கப்பட்ட படம் ...
திங்களன்று (ஆகஸ்ட் 15) கல்லூரியில் நடந்த கொடியேற்று நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி கலந்துக்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் (வலது கோடியில் நிற்பது நிர்வாக அதிகாரி)…
3. இன்னாலில்லாஹி வஇன்னா இளைஹி ராஜிவூன் posted byK.A.FAIZAL (madurai)[18 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6960
எல்லாம் வல்ல அல்லாஹ் புண்ணியம் பூத்து குலுங்கும் இந்த புனித ரமழான் மாதத்தின் பொருட்டால் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை கொடுத்து அருள்புரிவானாக!ஆமீன்.
மேலும் மர்ஹூம் அவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தினர்களுக்கு 'சப்ரன் ஜமீலா' எனும் மேலான பொறுமையை கொடுப்பானாக!ஆமீன். மர்ஹூம் அவர்களை பிரிந்து வாழும் அனைவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.வஸ்ஸலாம்.
5. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன் . posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[18 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6963
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிர்வாக அதிகாரி முனைவர் ஹம்ஸா முகைதீன் அவர்களின் மரண செய்தியறிந்து மிகவும் கவலை அடைந்தேன், இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப் பதவியை கொடுக்கவும் - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து சுவர்க்கத்தின் வாசனையை நுகர செய்வானாக ஆமீன்.
மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார்களுக்கும் , நண்பர்களுக்கும் , கல்லூரி மாணவியருக்கும் மற்றும் கல்லூரி நிர்வாகிகளுக்கும் ஸப்ரு என்னும் பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ்! கொடுத்தருள்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் பிழைகளை பொறுத்தருளி சுவன வாழ்க்கையை கொடுத்தருள்வானாக! அவர்களின் இழப்பு நமது கல்லூரிக்கு மாபெரும் இழப்பாகும். அன்னாரின் குடும்பம், உற்றார், உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரியப் படுதிக்க் கொள்கிறேன்.
7. Re:வஜீஹா கல்லூரி நிர்வாக அதி... posted bysyedahmed (GZ,China)[18 August 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 6965
இன்னலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.பேராசிரியர்
ஜனாப் ஹம்ஸாமொஹியிதீன் அவர்களின் மரண செய்தி
அறிந்து வருந்துகிறேன்.
பேராசிரியர் அவர்கள் ஆதித்தனார் கல்லூரியில் கடமை ஆற்றும் காலங்களில் மாணவர்கள் அனைவராலும் மிக்க மரியாதையும் அன்பையும், பாசத்தையும் பெற்றவர்.
தன்னடக்கமும் பிறருக்கு உதவும் குணமும் கொண்டவர்.
வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகள் பொறுத்து சுவனபதியை தருவானாக ஆமீன். அன்னாரின் குடும்பத்தாருக்கு சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன்
9. Re:வஜீஹா கல்லூரி நிர்வாக அதி... posted bySUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.)[18 August 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6968
"அஸ்ஸலாமு அலைக்கும்."
காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிர்வாக அதிகாரி முனைவர் ஹம்ஸா முகைதீன் இன்று வபாத் செய்தி அறிந்தோம். இன்னாலில்லஹி வஇன்ன இலிஹி ராஜ்ஹிவூன். அல்லாஹ் அவர்களின் பாவப் பிழையை போக்கி சுவர்க்கத்தை கொடுப்பானஹவும் ஆமீன்!!! அவர்ஹள் குடும்பதினர்ஹளுக்கு பொறுமையை தந்து அருள்வனஹவும். முனைவர் ஹம்ஸா முகைதீன் கல்விபணிக்க ஆஹா சேவை புரிந்தவர்ஹள்.
வருத்தமுடன்,
சூப்பர் இப்ராகிம் ச.ஹ. + குடும்பதினர்ஹள்
ரியாத். சவுதி அரேபியா,.
13. அதிர்ச்சி தரும் செய்தி! இன்னாலில்லாஹி... posted byS.K.Salih (Singapore)[18 August 2011] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 6972
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
மிகவும் அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது. எந்த ஆத்மாவுக்கும் வாழ்நாளின் அடுத்த ஒரு வினாடி கூட நிச்சமில்லாதது என்பதை உணர்த்தும் இறைவனின் மற்றொரு பாடம் இது!
செய்திப் பணிக்காக வாவு வஜீஹா வனிதையர் கல்லூரிக்கு நான் சென்றபோதெல்லாம் இன்முகத்துடன் என்னை வரவேற்கவும், சுற்றியிருப்பவர்களிடம், “இவன் கல்லூரியில் எனது student தெரியுமா...?” என்று பெருமையாகச் சொல்லவும் ஒருபோதும் தவறியதில்லை.
நல்ல மனிதரை அல்லாஹ் கைப்பற்றிக்கொண்டான். விபத்து என்ற சொல்தான் எனக்கு மனதில் அதிக வலியைத் தருகிறது.
வல்ல அல்லாஹ் இவ்வுலகில் அவர் எவ்வாறு மகிழ்வுடன் வாழ்ந்து வந்தாரோ அதையெல்லாம் விஞ்சிடும் வகையில் அவரது மறுமை வாழ்வை மிகச் சிறப்பாக்கி வைப்பானாக, ஆமீன்.
ஆசிரியர் பெருந்தகை முனைவர் ஹம்ஸா முகைதீன் அவர்களின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தார், உற்றார் - உறவினர், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி நிர்வாகக் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் அல்லாஹ் மேலான பொறுமையை வழங்கியருள்வானாக, ஆமீன்.
14. Re:வஜீஹா கல்லூரி நிர்வாக அதி... posted bySeyed Ibrahim S.R. (Dubai)[18 August 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6973
18. சீரிய சிந்தனையாளர் posted byW.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் (சென்னை)[18 August 2011] IP: 223.*.*.* India | Comment Reference Number: 6978
ஆதித்தனார் கல்லூரியில் நான் பயின்று கொண்டிருக்கும் காலங்களில் பொருளியல் துறையின் தலைவராக மிகச் சிறப்பான முறையில் பணியாற்றி வந்தவர். எப்பொழுதும் இன்முகத்துடன் காட்சி தந்தவர். நேரடியாக அவரிடம் பயிலவில்லை எனினும் கல்லூரியின் ஆரம்ப வேளைகளில் நடத்தப்படும் Bridge Course ல் அவர் செயல்பட்ட விதம், சொன்ன அறிவுரைகள் இன்றும் மனதை விட்டு அகலாமல் உள்ளது.
அத்தகைய நல்ல மனிதருக்கு அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியில் இடம்பெறச் செய்தருள்வானாக ஆமீன்.
19. Re:வஜீஹா கல்லூரி நிர்வாக அதி... posted byummurifaya sabu (dubai)[18 August 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6979
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். முனைவர் ஹம்ஸா முகைதீன் அவர்களின் வபாத் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையை கொடுத்து மர்ஹூம் அவர்களுக்கு சுவர்க்கத்தை கொடுப்பானாக.
21. Re:வஜீஹா கல்லூரி நிர்வாக அதி... posted byமுத்துவாப்பா (அல்-கோபர்)[18 August 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6981
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!
22. Re:வஜீஹா கல்லூரி நிர்வாக அதி... posted bySalai Syed Mohamed Fasi (AL Khobar)[18 August 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6982
Deep condolence
Very sad news for us.He is very talent, good administrator and also well advisor.Allah forget his sin and HE accept his good deeds.HE will provide paradise for him.My condolence to his family members
23. ஆழ்ந்த அணுதாபங்கள் posted bySalai Sheikh Saleem (Dubai)[18 August 2011] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6983
இன்னாலில்லாஹி...
நான் ஆதித்தனார் கல்லூரியில் படிக்கும் போது மர்ஹூம் அவர்கள் பொருளியல் துறையில் பணியற்றிக்கொண்டிருந்தார்கள். அந்த துறை எனக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும் நாங்கள் இருவரும் நல்ல ஒரு பரஸ்பர நட்புணர்வோடு ஒரு பேராசிரியர் என்பதை விட எனக்கு ஒரு நல்ல கலந்தாய்வாலராகவும் ஆலோசகராகவும் இருந்து வந்த ஒரு மனிதருள் மாணிக்கத்தை இழந்து நிற்கிறோம்.
ஜூன் மாதம் நான் ஊரில் இருந்த பொது அவர்களை பார்க்கணும் என்று வஜிஹா கல்லூரி சென்றிருந்தேன், ஆனால் அவர்கள் அங்கிருக்கவில்லை. எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருந்த்தருழ்ந்து அவர்கள் மறுமையில் நல்லோர்களுடன் மேலான சுவனபதியில் தரித்திருக்க அருள் பாளிப்பானகவும் ஆமீன். அன்பின் மாணவன்.
26. Re:வஜீஹா கல்லூரி நிர்வாக அதி... posted bymohamed abdul kader (dubai)[18 August 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6986
27. Re:வஜீஹா கல்லூரி நிர்வாக அதி... posted byshaik abdul cader (kyalpatnam)[18 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6987
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. முனைவர் ஹம்ஸா மொஹிதீன் அவர்களின் மரனம் அவர்களின் குடும்பத்திற்கும் கல்லூரிக்கும் மாபெரும் இழப்பாகும். எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தவுஸில் குடியிருதாட்டுவானாக. ஆமீன் மேலும் அவர்களின் குடும்பத்தாருக்கும் கல்லூரி னிர்வாகத்தாருக்கும் மாணவியருக்கும் வல்ல நாயன் பொறுமையை கொடுத்தறுள்வனாக.
28. Re:வஜீஹா கல்லூரி நிர்வாக அதி... posted bywww girls (kpm)[18 August 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 6988
Assalamu alaikum innalillahi inna ilaihi raji'oon our college going to miss you sir. there is the biggest loss for our college and to our students may allah give jennath to you and shower his maghfirat on you.
31. Re:வஜீஹா கல்லூரி நிர்வாக அதி... posted byPalappa Ahmed (Dammam - Seiko)[18 August 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6993
Inna Lillahi Va Inna Ilaihi Rajihoon. எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து சுவனபதியை கொடுப்பானாக ஆமீன்.
32. Re:சமுதாயத்துக்கு ஒரு இழப்பு posted byA.Tharvesh Mohammed (Kayalpatnam)[18 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6994
முனைவர் ஹம்சா மொஹிதீன் அவர்களின் மறைவுச்செய்தி - அதுவும் விபத்தின் மூலம் என்றறிந்து மனம் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
மென்மையானவர். பழகுவதற்கு இனிமையானவர். இக்ரா சார்பாக அடிக்கடி அவரை சந்திக்கும் நேரமெல்லாம் புன்முறுவலுடன் வரவேற்பார். ஒவ்வொரு தடவை சந்திக்கும் போதும் ''IQRA doing great and wonderful job. ஏராளமான ஏழை மாணவிகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது'' என்று மனமகிழ்ந்து பாராட்டி ஊக்கமளிப்பார். சில சமயம் பல ஆலோசனைகளை வழங்குவார். ஏழை மாணவிகளுக்கு உதவித்தொகை பெற்றுத்தருவதில் அதிக அக்கறை செலுத்துவார்.
அன்னாரின் மறைவு அவர்களது குடும்பத்திற்கு மட்டுமல்ல வஜீஹா கல்லூரிக்கும், மாணவிகளுக்கும், சமுதாயத்திற்கும் ஒரு இழப்புதான். கருணையுள்ள ரஹ்மான் அன்னாரின் பிழைகளை பொறுத்து, ஜன்னத்துல் பிர்தவுஸ் எனும் மேலான சுவனபதியிலே அவர்களை தங்கச்செய்வானாக. அன்னாரின் கப்ரை பிரகாசமாகவும், விசாலமானதாகவும் ஆக்கியருள் புரிவானாக. ஆமீன்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்களுக்கும், ஏனையோர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆழ்ந்த துயரத்துடன்,
தர்வேஷ் முஹம்மது
நிர்வாகி, இக்ரா.
34. Re:வஜீஹா கல்லூரி நிர்வாக அதி... posted byM.E.L.NUSKI (RIYADH -KSA)[18 August 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7000
சிறந்த பொருளியல் பேராசிரியர், எந்நேரமும் இன்முகத்துடன் வரவேற்கும் பண்பாளர்,நம் சமுதாய மாணவர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் முனைவர் கம்சா மொஹிதீன் அவர்கள் அகால வபாதகி விட்டார்கள் என்பதை அறிந்து மிக்க வேதனை அடைந்தோம். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் மண்ணறையை பிரகாசமாக்கி மேலான சுவனபதியில் நுழைய செய்வானாக ஆமீன் .அன்னாரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பதினருக்கு சபூர் என்னும் பொறுமையை தந்தருள் வானக ஆமீன் .
M .E .L .நுஸ்கி
மற்றும் காயல் நல மன்றம் ரியாத் அங்கத்தினர்கள்
ரியாத் -சவுதி அரேபியா
35. Re:வஜீஹா கல்லூரி நிர்வாக அதி... posted byசாளை நவாஸ் (singapore)[19 August 2011] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 7002
இன்னாலில்லாஹி ,
இன்று காலையில் என்றும் போல சந்தோசத்தோடு காயல் வலைதளத்தை திறந்து பார்த்தபோது, இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தியை படிப்பேன் என்று எதிர்பார்கவில்லை. நான் கல்லூரியில் பயின்ற போது எப்போதும் இன்முகத்துடன் காணபடுவார்.
அல்லாஹ் அவரின் பிழைகளை மன்னித்து சுவனபதியில் பிரவேசிக்க செய்வானாக!!! ஆமீன்
36. Re:வஜீஹா கல்லூரி நிர்வாக அதி... posted byMohamed Hanifa Haddad (New Jersey, USA)[19 August 2011] IP: 70.*.*.* United States | Comment Reference Number: 7014
I am extremely shocked about the death of My Uncle Kamsa Mohidden((My mother's sister husband). I would like to express my sorrow about this unfortunate happening. I know that My uncle have special importance in everyone’s life in our family and it is very depressing to loss him.
But everyone has to go one day and we have to accept this truth.
"Innalillaahi wa inna elaihi raajivoon."
Ya Allah, forgive (Uncle Kamsa Mohideen). Make him among the guided ones, raise his status and be his deputy among the grieving.
37. Re:வஜீஹா கல்லூரி நிர்வாக அதி... posted byRizwana Geeyavudeen (Boston)[19 August 2011] IP: 24.*.*.* United States | Comment Reference Number: 7033
Assalamu alaikkum...
Thanks for all your Duahs for my Grand father... It means a lot to us... We are shocked by his sudden demise. May Allah bless him, forgive all his sins and offer him Jannah!!
39. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் posted byசட்னி.செய்யது மீரான் (காயல்பட்டினம்)[20 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7035
அஸ்ஸலாமு அலைக்கும்.
முனைவர்,ஹம்சா மொஹிதீன் அவர்களின் மறைவுச்செய்தி - அதுவும் விபத்தின் மூலம் என்றறிந்து மனம் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
காய்மொழி ஜமாத்தின் தலைவராகவூம் இருந்துள்ளார்கள்.
அலலாஹ் அன்னாரின் பாவ,பிழைகளை பொறுத்து
மேலான ஜன்னத்துல் பிர்தவூஸ் எனும் சுவன பதியில்
பிரவேசிக்க செய்வானாக ஆமீன்.
40. Re:வஜீஹா கல்லூரி நிர்வாக அதி... posted byRefai (London, UK)[20 August 2011] IP: 82.*.*.* United Kingdom | Comment Reference Number: 7054
My cousin Prof . Kamsa Mohideen is considered as one of the beloved and nice person in the community and in the family. This is a big loss to all of us ....
வழக்கம் போலதான் செய்திகள் படிப்போமே என்று தான் திறந்தேன் ...இப்படி ஒரு அதிர்ச்சி ....இன்னா லில்லாஹி வ இன்னா இ லைஹி ராஜி யூன்.
தாங்கிக்கொள்ள இதயம் இல்லையே யா அல்லாஹ்... நல்லவர்களை நீ இப்படியும் உன்னகத்தே எடுத்துக்கொள்வாயோ.... நாங்கள் பொது சேவை செய்வதற்கு தூண்டு கோலாகவும் ..உறுதுணையாகவும் பல நல்ல ஆலோசனைகளை வழங்கி, சென்ற போதெல்லாம் இன்முகத்தோடு வரவேற்று உற்சாகபடுத்திய அற்புதமான மனிதர்...
மாணவிகளுக்கு மருத்துவ சிகிச்சை முகாம் K.V.A.T. அறக்கட்டளை சார்பில் கல்லூரியில் வைத்து நடத்திய போது உற்ற தோழனாய் எங்களிடம் அவர் காட்டிய நட்பு கண்முன்னே நிற்கிறது.
நல்ல சிந்தனை வாதி.... கல்வி மான் ....அவரிடம் நாங்கள் மாணவராக இல்லையே தவிர ....மற்றபடி அதையும் மிஞ்சும் விதமாக எங்களிடம் காட்டிய உரிமை... பழகியது சிறிய காலமே... ஆனால் மனதில் நிறைந்து நிற்கும் மா மனிதரை இன்றைக்கு இழந்து நிற்கிறோமே...யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? யா அல்லாஹ்...... உன் விருப்பம் ....நீ அழைத்துக்கொண்டாய்... ஆனால் எங்கள் இதயம் தான் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது ....இந்தப் பிரிவை தாங்கக்கூடிய சக்தியை எங்கள் மனதுக்கு தருவாய் யா அல்லாஹ் ...
மர்ஹூம் அவர்களின் நல்ல சேவைகளை ...ஆற்றிய பணிகளை ...வழங்கிய கல்விகளை ...மறுமை வாழ்வின் வளங்களாக நீ மாற்றி அருள் புரிவாயாக யா அல்லாஹ்...ஷுஹ தாக்கள் அந்தஸ்து பெற்று தூய ரமழானில் வல்லோனை காணச்சென்ற பேராசிரியர் அவர்களின் மண்ணறையை சுவனத்து பூங்காவாக்கி... கருணை புரி யா ரஹ்மானே...
யா அல்லாஹ்! யாரெல்லாம் துயரத்தால் வாடி வருத்தத்தில் மூழ்கி துக்கித் திருக்கிறார்களோ அவர்களை எல்லாம் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொண்டும் சமாதானப் படுத்துவாயாக ... !
மறைந்த மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார்கள் ...வஜிஹா மகளிர் கல்லூரியின் உரிமையாளர்கள்... ஆட்சிக்குழு வினர்கள் ...பேராசிரியர்கள் ...மாணவிகள் மற்றும் அவரிடம் கற்ற மாணவர்கள் அனைவர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் .
வேதனையுடன் ,
K.V.A.T. அறக்கட்டளை மற்றும் குடும்பத்தினர்
காயல்பட்டினம் & கத்தார்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross