மழைநீர் சேகரிப்பு வரைபடம் இல்லாமல் கட்டட அனுமதி பெற முடியாது என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதற்கான அரசாணை மீண்டும் பிறப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அவர் வெளியிட்ட அறிவிப்பு: 2001 - 2006 அதிமுக ஆட்சியில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. புதிதாக கட்டடம் கட்ட வேண்டுமானால் அதற்கான வரைபடத்தில் மழைநீர் சேகரிப்பு வரைபடம் இருந்தால் மட்டுமே அனுமதி கொடுக்கும் வகையில் அராசணை பிறப்பிக்கப்பட்டது.
2006இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு இந்த அரசாணையை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டது. இனி தமிழகத்தில் எந்த கட்டடம் கட்டினாலும் அதற்கான வரைபடத்தில் மழைநீர் சேகரிப்புக்கான வரைபடம் இருந்தால் மட்டுமே கட்டட அனுமதி வழங்கப்படும். அதற்கான அரசாணை மீண்டும் பிறப்பிக்கப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.
1. Re:மழை நீர் சேகரிப்பு வரைபடம... posted byA.W.S. (Kayalpatnam)[19 August 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 7006
நல்ல திட்டம்தான். வரைபடம் எடுப்பது அவவளவு சிரமம் அல்ல. கொடுக்கவேண்டியவர்களுக்கு கொடுத்துவிட்டால் பெறவேண்டியதை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் எந்தா அதிகாரி வரைபடத்தின் படி கட்டிடம் கட்டப்பட்டிருக்க இல்லியா என்று ஆராய்ந்து சான்று வழங்குகிறார்?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross