ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) சார்பில் ரமழான் 13ஆம் நாளன்று ஸஹர் (நோன்பு நோற்பு) உணவு மற்றும் இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சி ஜெய்ப்பூர் மவ்லானா ஜெம்ஸ் நிறுவனத்தார் அனுசரணையில் அவர்களது இல்லத்தில் நடத்தப்பட்டது.
ஸஹர் உணவு காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி தாளத்தில் சோறு வைத்து, சிட்டியில் கறி வகைகள் வைத்து ஸஹன் முறையில் பரிமாறப்பட்டது.
பிறகு அன்று மாலை இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாணவர் ஹாஃபிழ் எல்.எம்.எல்.தர்வேஷ் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். மவ்லவீ எம்.டபிள்யு.அப்துல் வதூத் ஃபாஸீ துஆ இறைஞ்சினார்.
பின்னர் நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இஃப்தார் நிறைவுற்றதும் மஃரிப் தொழுகை அங்கேயே கூட்டாக (ஜமாஅத்தாக) நிறைவேற்றப்பட்டது.
நிறைவாக, ஜக்வா சார்பில் அபூதாஹிர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க, ஹாஜி எம்.டி.அபுல்காஸிம் ஆலிம் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
இந்நிகழ்ச்சியில் ஜெய்ப்பூர் வாழ் காயலர்கள் மட்டுமின்றி, டெல்லியிலிருந்தும் சில காயலர்கள் மகிழ்வுடன் கலந்துகொண்டனர்.
தகவல்:
B.லுக்மான் மவ்லானா (Mob. 7667626466),
ஜெய்ப்பூர், ராஜஸ்தான். |