நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு, மும்பையில் குடும்பத்துடனின்றி தனித்து வசிக்கும் (Bachelors) காயல்கள் இணைந்து இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியை 17.08.2011 அன்று மாலையில் நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் காயல்பட்டினம் கறிகஞ்சி, கட்லெட், பஜ்ஜி வகைகள், சிக்கன் பக்கோடா, ரூஹஃப்ஸா குளிர்பானம், காயல்பட்டினம் ஹல்வா பால் என பலவகை உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
இஃப்தார் நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின் அங்கேயே மஃரிப் தொழுகை கூட்டாக (ஜமாஅத்தாக) நிறைவேற்றப்பட்டது.
இந்த இஃப்தார் நிகழ்ச்சியையொட்டி, காயல்பட்டினம் மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இஃப்தார் செலவின வகைக்காக ரூ.5,000 நன்கொடையளிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளைஞர்களனைவரும், மும்பையிலுள்ள அனைத்து காயலர்களையும் அரவணைத்து, விரைவில் காயல் நல மன்றம் ஒன்றை துவக்க வேண்டுமெனவும், அதற்கு தாங்கள் முழுமுனைப்புடன் செயல்பட ஆயத்தமாக உள்ளதாகவும் ஆர்வத்துடன் தெரிவித்தனர்.
இஃப்தார் ஏற்பாடுகளை ஹாஃபிழ் எம்.ஏ.சி.முஜாஹித் அலீ ஆலிம் புகாரீ, எஸ்.மிஸ்கீன் சாதிக், மஹ்மூத், ஹாஃபிழ் ஏ.டபிள்யு.அப்துல் காதிர் ஆலிம் புகாரீ உள்ளிட்ட காயலர்கள் செய்திருந்தனர். |