| |
செய்தி எண் (ID #) 6978 | | | புதன், ஆகஸ்ட் 17, 2011 | காயல்பட்டணம் அரசு பொது நூலக வாசகர் வட்ட ஆலோசனைக் கூட்டம் | செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர் இந்த பக்கம் 2525 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய | |
காயல்பட்டணம் அரசு பொது நூலகத்தின் வாசகர் வட்ட ஆலோசனைக் கூட்டம் 14-08-2011 ஞாயிற்றுக்கிழமை ஜாவியா அரபிக்கல்லூரி பேராசிரியரும் நூலக தன்னார்வலருமான அல்ஹாஜ்
கே.சுல்தான் ஸலாகுத்தீன் ஆலிம் மழாஹிரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வாசகர் வட்ட உறுப்பினரும், சமூக நல ஆர்வலருமான அல்ஹாஜ் எம்.எல்.சேக்னா லெப்பை அவர்கள் ரூபாய்
ஆயிரம் செலுத்தி நூலகப் புரவலராக இணைத்துக் கொண்டு, கிராஅத் ஓதி ஆலோசனைக் கூட்டத்தை துவக்கிவைத்தார்கள். வாசகர் வட்ட துணைத் தலைவரும், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி
ஆசிரியருமான ஜனாப் மு.அப்துல் ரசாக் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து எல்.கே.மேனிலைப்பள்ளி ஆசிரியரும், நூலகப்
புரவலருமான ஜனாப் எஸ்.எப்.முஹம்மது முஹிய்யித்தீன் சுலைமான் அவர்கள் நூலகக் கட்டட விரிவாக்கத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்கள். பின்னர் நூலக தன்னார்வலரும், சமூக நல
ஆர்வலருமான அல்ஹாஜ் வாவு கே.எஸ்.முஹம்மது நாசர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். பின்னர் வாசகர் வட்ட உறுப்பினர்கள் திரு.ஏ.கருப்பசாமி
மற்றும் ஜனாப் எஸ்.சேக் அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து நூலக தன்னார்வலர்கள் திரு.எம்.இராமசாமி மற்றும் ஜனாப் எம்.ஏ.மாஹின் ஆகியோர்
கருத்துரை நிகழ்த்தினார்கள். அதன்பின்னர் தற்போது நடைபெற்ற வி.ஏ.ஓ.தேர்வில் வெற்றி பெற்றவரும், நூலகத்தின் தீவிர வாசகருமான திரு.ஏ.தேசிகன் அவர்கள் தமது போட்டித்தேர்விற்கான
பயிற்சியின் போது நூலகத்திலிருந்து பெறப்பட்ட குறிப்புகள் மற்றும் பொது அறிவுத் தகவல்கள் தமக்கு எவ்வாறு பயனுள்ளதாக அமைந்தது என்பது பற்றி விளக்கினார்கள்.
பின்னர் புதியதாக நூலகப் புரவலராக தம்மை இணைத்துக் கொண்டவர்களுக்கு பராட்டு, நூலகக்கட்டட விரிவாக்கம், பெண்கள் பிரிவு நூலகம் மற்றும் நூலக உறுப்பினர்கள், புரவலர்கள் அதிகமாக
சேர்த்தல் போன்ற தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இறுதியில் அரசு நூலகர் அ.முஜீபு அவர்கள் நன்றியுரைக்குப்பின் நாட்டுப்பண்ணுடன் வாசர் வட்ட மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்
இனிதே நிறைவுற்றது.
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|