சுதந்திரதின விழாவையொட்டி, தூத்துக்குடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று காலை 9-30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தேசிய கொடியேற்றினார்.
இந்தியாவின் 65-வது சுதந்திர தினவிழா இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்பி நரேந்திரன் நாயர், மாவட்ட வருவாய் அலுவலர் அமிர்தஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் காலை 9-30 மணிக்கு அவர் தேசிய கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் உள்பட சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர். பின்னர், சமூக பாதுகாப்பு, வேளாண்மை, வருவாய்துறை, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை முன்னாள் படைவீரர்கள் நலன் ஆகிய துறைகளின் சார்பில் ரூ.13லட்சத்து 82ஆயிரத்து 930 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதனைத் தொடரந்து, காவல்துறை மற்றும் அரசு துறையில் சிறப்பாக சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் கெளரவிக்கப்பட்னர். இதில், டிஎஸ்பி ஸ்டீபன் சேசுபாதம், இன்ஸ்பெக்டர்கள் வீமராஜ், அன்னராஜ் உட்பட 72 காவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி விருது பெற்ற ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதி சாலை பஜவண்ணனுக்கு விருது வழங்கப்பட்டது.
பின்னர், திரேஸ்புரம் ஆர்சி பள்ளி, சிறுமலர் பள்ளி, ஏபிசி வீரபாகு மெட்ரிகுலேஷன், புனித ஜோசப், புனித சிலுவை, பிஎம்சி, உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், தேசிய ஒருமைப்பாடு, சுற்றுச் சூழல் சுகாதாரம், புவிவெப்பமயமாதல் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை கலை நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தினர்.
விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி பிரபுதாஸ், மாவட்ட பயிற்சி நீதிபதி குமரப்பா, கூடுதல் மாவட்ட முன்சீப் திருமணி, சப் கலெக்டர் சஜ்ஜன்சிங் ஆர் சவான், திட்ட அலுவலர் அருண்மணி, உதவி கலெக்டர் லதா, முதன்மை கல்வி அலுவலர் பரிமளா, மாவட்ட வழங்கல் அதிகாரி பஷீர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்ச்செல்வி, சுகாதாரத் துறை இயக்குநர் உமா, ஏடிஎஸ்பி சாமிதுரை வேலு, டிஎஸ்பி சோனல்சந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தகவல்:
www.tutyonline.net
|