சீனாவின் தென்கோடியில் உள்ள நகரம் சென்ஜன். ஹாங்காங் நகரை எதிர்நோக்கி இருக்கும் சென்ஜன் ஆறுக்கு வடக்கில் உள்ளதால், இந்நகருக்கு சென்ஜன் என்ற பெயர் வந்தது. 1970கள் வரை பாவ்ன் கிராமமாக இருந்து, 1979 ஆம் ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார கொள்கையின் பயனாக பெரும் நகரமாக இது மாறியது.
தற்போது இந்நகரில் சுமார் 100,000 முஸ்லிம்கள் வாழ்வதாக புள்ளிவிபரம் கூறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து தொழில் நிமித்தமாக குடியேறியுள்ள முஸ்லிம்களும் அடங்குவர். இந்நகரில் காயலரும் பலர் உள்ளனர்.
இந்நகரின் ஒரே பள்ளிவாசல் என கூறப்படும் ஷாங் மேலின் பள்ளியில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் காயலர் சிலர் கலந்துக்கொண்ட காட்சி :-
3. Re:சென்ஜனில் காயலர்கள் இஃப்த... posted byvsm ali (Hetang , Jiangmen, Jiangmen)[15 August 2011] IP: 59.*.*.* China | Comment Reference Number: 6891
இந்த புகைப்படங்களைஎல்லாம் பார்க்கும்போது , பழைய எண்ணங்கள் நினைவுக்கு வருகிறது. 2000 முதல் 2006 ம் வருடம் வரை , நாங்கள் , நோன்பு காலங்களில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் , இப்தாருக்கும் , தராவீகுக்கும் சென்றிருக்கிறோம் .
இந்த shenzhen பகுதியில் 90 வது வருட ஆரம்ப கட்டங்களில் வெறும் 5 முதல் 10 பேர் மட்டுமே கொண்டு ஜும்மா தொழுதிருக்கிறோம். ஒருசில வாரங்களில் நம் காயலர் ஒருவரே இமாமாக நின்று ஜூம்மா தொழுகையும் நடத்தி இருக்கிறார் என்பதும் நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம். மாஷா அல்லாஹ் , இன்றைய நிலையில் சுமார் 1500 பேர் வரை shenzhen நகரில் உள்ள இரண்டு பள்ளிகளிலும் ஜூம்மா தொழுகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் இந்த பள்ளியில் பெருநாள் தொழுகைக்கு சுமார் 10000 பேர் வருகின்றனர். ( இங்கு பெருநாள் ஒரு தினத்தில்தான் கொண்டாடப்படுகிறது என்பதை நாமெல்லாம் உணர வேண்டும் )
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross