ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாளை முன்னிட்டு, அனைத்துலக காயலர்களுக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூரு காயல் நல மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் தலைவர் அப்துர்ரஹீம் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கை பின்வருமாறு:-
இன்று புனித ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடும் அனைத்துலக காயலர்களுக்கும், உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் எமது நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்! ஈத் முபாரக்!!
கடந்த ஒரு மாத காலமாக அல்லாஹ்வுக்காக நோன்பிருந்து, தராவீஹ் தொழுது, நல்ல பல அமல்கள் செய்த நம் யாவரின் அனைத்து நற்செயல்களையும் எல்லம்வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக...
ஏக இறைவனின் அருள்பெற்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த நல்ல நாளை போல் வாழ்வின் இனி வரும் எல்லா நாட்களிலும் அருள் - பொருள் வளங்களைப் பெற்று நீடூழி வாழ வாழ்த்திப் பிரார்த்திக்கிறோம். வஸ்ஸாம்.
இவண்,
தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,
பெங்களூரு காயல் நல மன்றம்.
இவ்வாறு அந்த வாழ்த்தறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்,
துணைச் செயலாளர்,
காயல் நல மன்றம்,
பெங்களூரு, கர்நாடக மாநிலம். |