இன்று (ஆகஸ்ட் 31) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - காயல்பட்டினம் கிளை ஏற்பாட்டில் – கடற்கரையில் இன்று காலை 07.45 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொழுகையை ஹாஃபிழ் ஏ.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் வழிநடத்தினார்.
இத்தொழுகையில் காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
தொழுகையைத் தொடர்ந்து, குத்பா பேருரையை அப்துல் கஃபூர் மிஸ்பாஹி நிகழ்த்தினார்.
நிகழ்வுகளின் முடிவில், நன்கொடையாக ரூபாய் 60,000 தொகையும், பள்ளிவாசல் கட்டுவதற்கான நன்கொடையாக ரூபாய் 50.000 தொகையும், ஒரு சில தங்க ஆபரணங்களும் திரட்டப்பட்டன.
தகவல்:
Y.M.முஹம்மத் தம்பி,
ஏ.கே.எம்.ஜுவல்லர்ஸ்,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம்.
படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம்.
செய்தியில் சில வாசங்களும், படங்களும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. |