இன்று நோன்புப் பெருநாளை முன்னிட்டு, ஐக்கிய அரபு அமீரகம், துபை - தேரா ஈத்கா மைதானத்தில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் காயலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து, அமீரக காயலர் கவிமகன் காதர் தெரிவித்துள்ளதாவது:-
நிறைவான அருளன்பின் இறைஏகன் திருப்பெயரால்!
இன்று காலை (செவ்வாய் கிழமை), ஐக்கிய அரபு அமீரகம், துபாய்,தேரா ஈத்கா மைதானத்தில்
பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்காக ஒன்றுகூடியது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.தேச,மொழி எல்லைகளைக் கடந்து, முஸ்லிம்கள் ஒருதாய்ப் பிள்ளைகளென,ஒருவருக்கொருவர் முகமன் மற்றும் துஆ செய்து வாழ்த்தினர்.
இதே மைதானத்தில் ஒன்றுகூடிய காயலர்கள்,தொழுகைக்குப் பின்னர், தனது சககாயலனை, சொந்த சகோதரனைப் போல, ஆரத்தழுவி அன்புடன் சுகம் விசாரித்து, பெருநாள் வாழ்த்துக்களை, உள்ளன்போடு பகிர்ந்து கொண்டனர்.
உலகத்தின் எந்நாட்டில் வாழ்ந்தால் என்ன?
உள்ளத்தில் காயலனாய் ஒன்றாய் இருப்போம்!
வெவ்வேறு கொள்கைகள் இருந்தால் என்ன?
ஒருதாயின் பிள்ளைகளாய் இணைந்தே நிற்போம்!
இவ்வாறு கவிமகன் காதர் தெரிவித்துள்ளார்.
புகைப்பட தொகுப்புகளின் பாகம் 2 யை காண இங்கு அழுத்தவும்
|